பஞ்சாயத்து முடிஞ்சாச்சு, எல்லாரும் கிளம்புங்க... அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யேதான்...அதிகாரபூர்வமாக அறிவித்த அம்மா...

Published : Aug 28, 2019, 09:49 AM ISTUpdated : Aug 28, 2019, 10:07 AM IST
பஞ்சாயத்து முடிஞ்சாச்சு, எல்லாரும் கிளம்புங்க... அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யேதான்...அதிகாரபூர்வமாக அறிவித்த அம்மா...

சுருக்கம்

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனது மகனுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அக்கடிதத்தில் தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அடுத்த சூப்பர் ஸ்டாராக உலகம் விஜயைக் கொண்டாடுவதை நினைக்கையில் ரசிகர் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பிகில் அடிக்கத் தோன்றுவதாக அவர் எழுதியிருப்பதைக் கண்டு அஜீத், விஜய் ரசிகர்கள் செம காண்டாகியுள்ளனர்.

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனது மகனுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அக்கடிதத்தில் தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அடுத்த சூப்பர் ஸ்டாராக உலகம் விஜயைக் கொண்டாடுவதை நினைக்கையில் ரசிகர் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பிகில் அடிக்கத் தோன்றுவதாக அவர் எழுதியிருப்பதைக் கண்டு அஜீத், விஜய் ரசிகர்கள் செம காண்டாகியுள்ளனர்.

விஜய்யின் ‘பிகில்’படம் தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. இம்முறை அந்தப் படத்துடன் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’கார்த்தியின் ‘கைதி’ஆகிய படங்கள் களத்தில் இறங்குகின்றன. எனவே ‘பிகில்’படத்துக்குக் கூடுதலாக கொஞ்சம் விளம்பரம் தேவைப்படுகிறது என்று நினைத்தோ என்னவோ விஜய்யின் தாயார், தனக்கு அடுத்த அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைக்கு மிக உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அக்கடிதத்தில்,...ஒரு செவிலியரின் உள்ளங்கையில் சிசுவாக இருந்த விஜய் இன்று கோடானுகோடி தாய்மார்களின் உள்ளங்களை ஆள்வது தொடங்கி தற்போது, தியாகராஜ பாகவதர், எம்ஜியார், ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டாராய் விஜய் உயர்ந்திருப்பதாகவும் அதை ஒரு தாயாக இல்லாமல் கோடானுகோடி ரசிகர்களுல் ஒருவராய் இருந்து பிகில் அடிக்கத்தோன்றுவதாகவும் முடித்திருக்கிறார்.

இக்கடிதம் வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகியிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான கமெண்டுகள் பறந்துகொண்டிருக்கின்றன. இதோ சாம்பிளுக்கு சில....

...கைதி னு ஒரு படம் தீபாவளிக்கு வருது அதான் எங்க அம்மாவ விட்டு ப்ரமோஷன் வேலய ஆரம்பிச்சிட்டே. பயாம இருக்கும்ல - விஜய்...கடைசில அம்மாவை கூட ப்ரோமோஷனுக்கு இறக்கி விட்டுக்கான் பாவாடை தேவாங்கு ஜோசப் விஜய்  😂. சூப்பர்ஸ்டார் ஆகுறதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேண்டும். 😡 ஒன்னை மாதிரி தேவாங்கு எல்லாம் சூப்பர்ஸ்டார் ஆக முடியாது . தலைவர் மட்டும் தான் சூப்பர்ஸ்டார்....

...SONG LEAK - SAC INTERVIEW -SANJAY DANCE -  இப்போ லட்டர்  
ஒரு படத்துக்கு குடும்பமே ப்ரோமோட் பண்றது இதான் முதல் முறை....தமிழ்நாட்டுல பொறந்தா கூடா இவ்வளோ சூப்பரா தமிழ் எழுத தெரிய கஷ்ட படுவாங்க... ஆனால் மலையாளி அம்மா வா இத எழுதுனது ...

...பக்கத்து ரூம்லதான், ,,தூங்கிட்டு இருந்துருபாரு,,எழுப்பி சொன்னா முடிச்சு,,,,இதுக்கு எதுக்கு லெட்டர்லாம் எழுதிகிட்டு,,,,,,Oha...atotha superstar averthanu mention pannaranga pola...

நேத்து சோபனா நேர்கொண்ட பார்வை பாத்ததா ஒரு நிவ்ஸ் வந்துச்சி. அப்பவே முடிவு பன்னிருக்கும் தல போர வேகத்துக்கு சூப்பர்ஸ்டாரையும் கடந்து பெரிய இடத்துக்கு போயிருவாரோனு இன்னக்கி இந்த கடிதம் மூலமா தன் மகன அடுத்த சூப்பர்ஸ்டார்னு சொல்லி  பப்லிசிடிய தேட பாக்குது...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்