
அர்ஜுன் ரெட்டி புகழ், நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர்கள் இருவருக்குமே இது வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'டியர் காம்ரேட்' படத்திலும் விஜய் - ராஷ்மிக்கா ஜோடி மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சிறு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேபோல் தற்போது தமிழிலும் ராஷ்மிகா அறிமுகமாகியுள்ளார். நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராஷ்மிகாவிற்கு வாழ்த்து கூறி, கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.