தளபதி விஜய் கைதட்டி பாராட்டியது இவரையா?: கோடம்பாக்க தாறுமாறு ..!

Published : Dec 03, 2019, 06:28 PM IST
தளபதி விஜய் கைதட்டி பாராட்டியது இவரையா?: கோடம்பாக்க தாறுமாறு ..!

சுருக்கம்

கடைசியில் விஜய்சேதுபதி ரொம்பவே எதிர்பார்த்திருந்த சங்கத்தமிழன் படமும் வந்த வேகத்தில் பொட்டியில் சுருண்டுகொண்டுவிட்டது. இந்த நிலையில், இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் விஜய்க்கு வில்லனாக செம்ம கெத்தாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ஸ்பாட்டில் அவரது  கலக்கலான நடிப்பைப் பார்த்து விஜய்யே கைதட்டி பாராட்டுகிறாராம்.

*    தனுஷ், வெற்றி மாறனே எதிர்பாராத வகையில் அகில இந்திய சினிமா ஆளுமைகளின் கவனத்தை ஈர்த்தது ‘அசுரன்’ படம். இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். அவரது தம்பி தயாரிக்கிறார். இந்த நிலையில், ஒரிஜினல் படத்தின் கதையை தனக்கும், தங்களுக்கும் ஏற்ப மாற்றுகிறாராம் வெங்கடேஷ். 
(பார்த்துலே சிதம்பரம்! நம்ம கிட்ட நல்ல படம் இருந்தா எடுத்துக்கிடுவானுவ. பெறவு அதை மாத்திடுவானுவ)

*    வருது! வருது! என்று பயம் காட்டிக் கொண்டே இருந்த அந்த funny புலி வந்தேவிட்டது! என்கிறார்கள் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் விஷயத்தை. பிரபல இரட்டை இயக்குநர்கள் ஜேடி  ஜெர்ரி இயக்கத்தில், வேல்ராஜ் கேமெராவில், ஹாரீஸ் இசையில், பிரபு மற்றும் விவேக்கின் துணை நடிப்பில், மிஸ் இந்தியா ஈத்திகாதிவாரி கதாநாயகியாக நடிக்க இதோ படப்பிடிப்பு துவங்கிவிட்டது பூஜையோடு. 
(படத்துல நடிக்கிறவங்களோட காஸ்ட்யூம் எல்லாம் தள்ளுபடி விலையில தாறுமாறா வந்து சேரும்)

*    சூர்யாவுக்கு நிகராக தொடர்  தோல்வி படங்களை தந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன், கடைசியாய் ரிலீஸான தனது ‘நம்மவீட்டுப் பிள்ளை’ மூவி ஹிட்டால், ஃபிளாப்பா என்று தெரியாத நிலையில் இருக்கிறார். இந்நிலையில் தனது அடுத்த படமான ‘ஹீரோ’ படம் பற்றி வேண்டுமென்றே சிலர் மிக மோசமான வதந்திகளை கிளப்புவதாக ஆதங்கப்படுகிறார். 
(அவிய்ங்க எப்பவுமே அப்படித்தான்! ஹ்ஹாங்!)

*    கடைசியில் விஜய்சேதுபதி ரொம்பவே எதிர்பார்த்திருந்த சங்கத்தமிழன் படமும் வந்த வேகத்தில் பொட்டியில் சுருண்டுகொண்டுவிட்டது. இந்த நிலையில், இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் விஜய்க்கு வில்லனாக செம்ம கெத்தாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ஸ்பாட்டில் அவரது  கலக்கலான நடிப்பைப் பார்த்து விஜய்யே கைதட்டி பாராட்டுகிறாராம். 
(தளபதி, ஒரு கதை சொல்லட்டுமா தளபதி)

*    இந்த டிசம்பர் மாதத்திற்கு இருப்பதோ நான்கே வாரங்கள்தான். இதற்குள் கிட்ட்த்தட்ட இருபத்தைந்து படங்களை ரிலீஸ் செய்து, கல்லாவும் கட்டி, ஹிட் பெயரையும் வாங்கிட துடிக்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். ஆனால் சிவகார்த்தியின் ஹீரோ, கார்த்தி - ஜோதிகாவின் தம்பி ஆகிய படங்களை மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக லீவு வரும் நாட்களான டிசம்பர் இறுதியில் ரிலீஸ் செய்ய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் ஆர்வம் காட்டுகின்றனராம். 
இதில் சின்ன ஹீரோக்களும், சின்ன தயாரிப்பாளர்களும் செம்ம டென்ஷனாகியுள்ளனர். இவர்களில் உதயநிதி ஸ்டாலினும் அடக்கம். அவரது ‘சைக்கோ’ படம் சிறு படங்களில் ஒன்றாகத்தான் ரிலீஸாகிறதாம். 
(சின்ன கல்லு பெத்த லாபம்! லாஜிக் இங்கே ஒர்க் அவு ஆகுமா?)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?