
விஜய் பிறந்தநாளை தெறிக்க வைக்கப்போகும் ரசிகர்கள்...
இளையதளபதி விஜய் பிறந்த நாளை எப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.
ஏற்கனவே இணையளத்தில் ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே ரசிகர்கள் விஜய்காக ஸ்பெஷல் மீம்ஸ், அவரை பற்றிய முக்கிய தகவல்களை பகிர்த்து வரும் நிலையில்.
சென்னை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகர தலைமையை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர், தொடர்ந்து 1௦ நாட்களாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கவுன்ட் டவுன் பேனர்கள் வைத்து கலக்கி வருகின்றனர்.
மேலும் நாளைய தினம், அப்பகுதி விஜய் ரசிகர்களுக்காக 'கத்தி' படம் ரசிகர்களுக்காக இலவசமாக திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல ரசிகர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், பள்ளி குழந்தைகளுக்கு ரசிகர் மன்றத்தின் சார்பாக பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் கொடுக்கவும் உள்ளனர்.
அதே போல முதியோர் இல்லங்களுக்கு உணவுகள் கொடுக்கவும் ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.
இவர்களை போலவே பல விஜய் ரசிகர்களுகம் , ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நல செல்யல்களில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்தது தான். மேலும் நாளை விஜய் பெயரை வைத்து ஒரு தீபாவளியே கொண்டடி விடுவார்கள் ரசிகர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.