உடற்பயிற்சியாளரை கொடூரமாக தாக்கிய விஜய்! விரைவில் ரவுடிகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!

Published : Sep 25, 2018, 12:20 PM IST
உடற்பயிற்சியாளரை கொடூரமாக தாக்கிய விஜய்! விரைவில் ரவுடிகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!

சுருக்கம்

பிரபல நடிகர் துனியா விஜய் உடற்பயிற்சியாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் துனியா விஜய் இவர் சங்கர் ஐபிஎஸ், மாஸ்தி குடி, ரிங் ரோடு துனியா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர்.

பிரபல நடிகர் துனியா விஜய் உடற்பயிற்சியாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் துனியா விஜய் இவர் சங்கர் ஐபிஎஸ், மாஸ்தி குடி, ரிங் ரோடு துனியா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். துனியா படம் வாயிலாகவே இவருக்கு துனியா விஜய் என்ற பெயர் கிடைத்தது. இவர் கடந்த சனிக்கிழமை இரவு வசந்த் நகர் அம்பேத்கர் பவனில் நடைபெற்ற ஆணழகன் போட்டிக்கு தலைமை தாங்க தமது நண்பர்களுடன் சென்றிருந்தார். 

 உடற்பயிற்சியாளர் மாருதி கவுடா என்பவரும் அங்கு இருந்தார். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு கவுடாவின் உறவினரான உடற்பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வந்தார். கிருஷ்ணமூர்த்தியும் விஜயும் ஏற்கனவே நண்பர்களாக இருந்தவர்கள். விஜய்க்கு இவர்தான் உடற்பயிற்சியாளர் ஆகவும் இருந்தார். ஆனால் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றனர் .இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிருஷ்ணமூர்த்தி குறித்து மாருதி கவுடா விடம் விஜய் கேட்டுள்ளார். அப்போது விஜய்க்கும் மாருதி க்கும் வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கை கலப்பானது. 

இதையடுத்து நடிகர் துனியா விஜய் நண்பர்கள் மாருதியை சூழ்ந்துகொண்டு தாக்க தொடங்கினர். பின்னர் அவரை தூக்கி ரேஞ்ச் ரோவர் காருக்குள் போட்ட விஜய் நண்பர்கள் அடித்து உதைத்துள்ளனர். இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் வைத்து அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாருதியின் உறவினரான கிருஷ்ணமூர்த்தி high grounds காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அங்கிருந்த சேஷாத்திரிபுறம் காவல் உதவி ஆணையர் ரவிசங்கர், துணியா விஜய்க்கு போனில் அழைப்பு விடுத்தார். 

 இதையடுத்து அங்கு வந்த நடிகர் துனியா விஜய் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர் இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஜய் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தாக்குதலில் படுகாயமடைந்த மாருதி கவுடா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜய்யின் பெயரை ரவுடிகள் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் மீது ஏற்கனவே நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதால் காவல்துறை இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் மீது ஏற்கெனவே இவரது முதல் மனைவி நாகரத்தினம் என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்திருந்தார். மாஸ்தி குடியரசு தயாரிப்பாளரை இவர் தாக்கியதாகவும் வழக்கு ஒன்று உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!