சர்கார் படத்தில் நடிகர் விஜய் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்கார் படத்தில் நடிகர் விஜய் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த விஜய் ஒரு வேடத்தில் நெகடிவ் ரோல் செய்திருப்பார். அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் விஜய் வில்லன் கேரக்டர் செய்ததால் பேசப்பட்டது. இதே போல் கத்தி படத்திலும் கூட இரண்டு கேரக்டரில் ஒரு கேரக்டர் செல்பிஷ் கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். பின்னர் உண்மை தெரிந்து ஹீரோ ஆவார்.
இதே போலத்தான் சர்கார் படத்தில் வெளிநாட்டில் இருக்கும் விஜய் இந்தியாவை பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் தவறான எண்ணத்துடன் நெகடிவ் மைன்டில் இருப்பது போல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் உண்மை புரிந்து ஹீரேவாக விஜய் உருவெடுப்பது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சர்க்கார் படம் குறித்து அண்மையில் பேட்டியொன்றில் தெரிவித்த ராதாராவியின் பேட்டி மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் பணக்கார வெளிநாட்டு இந்தியர் பாத்திரப்படைப்பில் நடிப்பதாகத் தெரிவித்தார். கதையின் படி படிப்படியாக அரசியலுக்குள் நுழையும் விஜய், வழக்கம் போல மக்களின் ரட்சகனாக மாறுகிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு எதிர்மறையான கதாபாத்திரம் என்று கூறப்பட்டது உண்மை தான் தெரிய வந்துள்ளது. படத்தின் தொடக்கக் காட்சிகளில் அவர் வில்லன் ஹீரோ போல தோற்றமளிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் அவரின் ஹீரோயிசம் வெளிப்படும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ராதாரவியும் பழ.கருப்பையாவும் நரித் தந்திரம் நிறைந்த அரசியல்வாதிகள் பாத்திரங்களில் வலம் வருகிறார்களாம். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் வகையிலான அரசியல் கதையம்சமுள்ள அதிரடித் திரைப்படமாக சர்க்கார் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.