நட்புடன் வாழ்ந்து...துரோகத்தால் வீழ்த்தப்பட்ட சம்பவமே விஜய் 61 ...

 
Published : Mar 28, 2017, 04:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
நட்புடன் வாழ்ந்து...துரோகத்தால் வீழ்த்தப்பட்ட சம்பவமே விஜய் 61 ...

சுருக்கம்

vijay 61 movie story leeked

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விஜய் மூன்று
வேடங்களில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும்  நிலையில்,   படத்தின் கதையும்   இதுதான் என்று ஒரு கதை இணையதளத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. 

அந்த கதை இதுதான். ” பிஸினஸ்மேனான எஸ்.ஜே. சூர்யா, ஏழைத் தொளிலாளர்களின் உரிமைக்காகப் போராடும் விஜய்யை நய வஞ்சகாமாகப் பேசிப் பழகி கொலை செய்கிறார்… அவருடைய மனைவி நித்யா மேனனையும் துடிதுடிக்கக் கொல்கிறார். விஜய் மகன் மட்டும் எப்படியோ தப்பித்து விடுகிறார்.

மகன் விஜய் வளர்ந்த பிறகு இந்த ஃப்ளாஷ்பேக்கை சொல்வதற்காகவே உயிரோடு இருக்கும்  வயதான கிழவன் மூலமாக நடந்ததை அறிந்து, கடைசியில் எஸ்.ஜே.சூர்யாவை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தோட கதையாக இருக்க வேண்டும்” என்கிறார்கள். 

இந்த கதை உண்மைதானா? என்று தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் வெளிவந்த புகைப்படத்தை வைத்தே இந்த கதையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எதுவாக இருந்தாலும் படம் வரும்போது தெரிந்துவிடும். அதுவரைக்கும் காத்திருப்போமாக…

மேலும் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. அட்லீ படபிடிப்பு தளத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்தும்  எப்படி இந்த புகைப்படங்கள் வெளியானது என்று தெரியாமல் படக்குழுவினரே அதிர்ச்சியில் உள்ளனர். இணையத்தில் வெளியான ‘விஜய் 61′ புகைப்படங்கள் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!