Vignesh Shivan: 'ஜவான்' ட்ரைலரை பார்த்து மெர்சலான விக்கி..! மனைவி நயன்தாராவுக்கு கொடுத்த ஸ்பெஷல் மெசேஜ்!

By manimegalai a  |  First Published Aug 31, 2023, 6:12 PM IST

‘ஜவான்’ படத்தின் ட்ரைலரை பார்த்த பின்னர், மனைவி நயன்தாரா மற்றும் எஸ்ஆர்கேக்கு விக்னேஷ் சிவன் ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை போட்டுள்ளார்.
 


இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டெம்பர் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் இயக்குனர் அட்லீ, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பிரியா மணி, யோகி பாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகை நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என பல ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Tap to resize

Latest Videos

வாணி போஜனை தொடர்ந்து சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட்! கதாநாயகியாக மாறிய சீரியல் நடிகை !

'ஜவான்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று மாலை ஷாருக்கான் - நயன்தாராவின் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தின் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாரான மிரட்டலான போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்து மெர்சல் செய்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில், ட்ரைலரை பார்த்து விட்டு விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவி நயன்தாரா மற்றும் ஷாருக்கானுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளார்.

ஈஸ்வரியை பார்த்து வெண்பா சொன்ன வார்த்தை..! ஷாக்கான ஜீவானந்தம்... 'எதிர்நீச்சல்' சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட்!

“பாலிவுட்டில் முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்துள்ளதை நினைத்து பெருமை தங்கமே.... அட்லீ, அனிருத், விஜய் சேதுபதி என அனைவருமே சிறப்பான படைப்பை கொடுத்துள்ளீர்கள்,” என்று அவர் கூறியுள்ளார். டிரெய்லரைத் தவிர, நயன்தாரா இன்று சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கினார். இதில் முதல் முறையாக தன்னுடைய மகன்களின் முகத்தையும் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பிரபலத்தின் மனைவி உட்பட இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஃபாலோ பண்ணும் 5 முக்கிய பிரபலங்கள் ?

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பதான்' 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், அட்லீயின் இந்த திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஷாருக்கான் நடித்துள்ள, 'ஜவான்' படத்தை ஷாருக்கானின் மனைவி, கௌரி கான் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் சுமார் 300 கோடி பட்ஜட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

click me!