
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தவறாமல் வாழ்த்துக்களை சொல்லும் அவரது காதலன் விக்னேஷ் சிவன் மூச்சு விடவில்லை.
நயன்தாரா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை அமைதியான முறையில் கொண்டாட அவர் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ளார். நயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் அவருடன் நடித்த ஹீரோக்களின் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. நயன்தாரா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் காதலருடன் நேரம் செலவிட அவ்வப்போது வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்.
அப்படித்தான் இந்த முறையும் தனது காதலருடன் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் நயன்தாரா. நியூயார்க்கில் ஊர் சுற்றும் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை காதலில் திளைத்துக் கிடப்பதால் விக்னேஷ் சிவனுக்கு ட்விட் போட நேரமில்லையோ..? என்னவோ..?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.