
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய 'நீ தானே என் பொன்வசந்தம்' படத்தின் ஹீரோயின் சமந்தா தோழியாக அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட இவர் பின் காமெடி கலந்த கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
இவருடைய நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்படவே பல படங்களில் நடிக்க வாய்புகள் கிடைத்தது. தற்போது தமிழை தாண்டி தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் தெலுங்கில் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு படத்திற்காக, வியாட்நாம் சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் இவருடைய நண்பருடன் சேர்ந்து இரண்டு கூல் காபி குடித்துள்ளார்.
இவர்கள் கிளம்பும் போது பில் கொடுக்கப்பட்டுள்ளது. பில்லை பார்த்ததும் இவருக்கு தலையே சுற்றி விட்டதாம். ஒரு காபியின் விலை 40,000 ரூபாய் என இரண்டு காபிக்கும் சேர்த்து 80,000 மற்றும் அதற்கு 10% வாட் வரியுடன் 88,000 டாங் பில் கொடுத்துள்ளனர்.
ஆனால் அங்கு 88 ஆயிரம் டாங் என்பது இந்திய ரூபாய்க்கு தோராயமாக 250 ரூபாய் மட்டும் தானாம். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இவர் யாராவது ஏழையாக இருப்பதாக நினைத்தால் வியட்நாம் போங்க. அங்கு 100 டாலர் இருந்தால் 27 லட்சம் டாங் கிடைக்கும். ஒரே நாளில் மில்லியனர் ஆகிவிடலாம் என காமெடியாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.