’மக்கள் செல்வி’ பட்டத்துடன் அடுத்த ஜெயலலிதா ஆக ஆசைப்படும் வரலட்சுமி சரத்குமார்...

By Muthurama LingamFirst Published Mar 5, 2019, 11:56 AM IST
Highlights

அந்த வரிசையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் புதிதாக கமிட் ஆகியுள்ள ‘டேனி’படத்தின் முதல் பார்வை டிசைன்கள் வெளியிடப்பட்டன. அந்த டிசைன்களில் முதல் முறையாக வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 

‘எனக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. விரைவில் அவசியப்படும்போது நானே வருவேன்’ என்று இரு தினங்களுக்கு முன்பு சரத்குமாரின் மகள் வரலட்சுமி அறிவித்திருந்த நிலையில் அவருக்கு ‘மக்கள் செல்வி’ பட்டம் வழங்கி அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது ஒரு படக்குழு.

இன்னும் திருமணம் செய்துகொள்ளாத வரலட்சுமி சரத்குமாருக்கு இன்று 34 வது பிறந்தநாள். சமீப சில மாதங்களாக மிக அதிகமான படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார் வரலட்சுமி. அந்த வரிசையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் புதிதாக கமிட் ஆகியுள்ள ‘டேனி’படத்தின் முதல் பார்வை டிசைன்கள் வெளியிடப்பட்டன. அந்த டிசைன்களில் முதல் முறையாக வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.நடிகர்களில் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் வரை பட்டம் வைத்துக்கொள்ளும் நிலையில் நடிகைகளுக்கு பட்டம் வழங்கும் நடைமுறை தமிழ்சினிமாவில் அவ்வளவாக இல்லை. சாட்சாத் நயன்தாராவே இன்னும் வெறும் நயன்தாராவாகவே நடமாடிவரும் நிலையில் இந்த மக்கள் செல்வி பட்டம், வரலட்சுமியின் அரசியல் எண்ட்ரிக்காகவே திட்டமிட்டு சூட்டப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள செல்வியின் இடத்தை மக்கள் செல்வி பட்டத்துடன் பிடித்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் வரலட்சுமிக்கு ஜெ’வின் சுயசரிதையாகத் தயாரிக்கப்படும் அத்தனை படங்களிலிருந்தும் சசிகலா கேரக்டரில் நடிக்க மட்டுமே அழைப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!