வனிதா கூறிய வார்த்தையால்... கடுப்பாகி கத்திய ரம்யா கிருஷ்ணன்! வெளியான பரபரப்பான புரோமோ!

Published : Jul 15, 2021, 01:57 PM IST
வனிதா கூறிய வார்த்தையால்... கடுப்பாகி கத்திய ரம்யா கிருஷ்ணன்! வெளியான பரபரப்பான புரோமோ!

சுருக்கம்

நடிகை வனிதா விஜயகுமார், விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்போது வனிதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. இதில் வனிதா பேசியதற்கு, ரம்யா கிருஷ்ணனும் கோவப்பட்டு கத்துவது போன்ற காட்சிகள் இடம்பெடுறுள்ளது.  

நடிகை வனிதா விஜயகுமார், விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்போது வனிதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. இதில் வனிதா பேசியதற்கு, ரம்யா கிருஷ்ணனும் கோவப்பட்டு கத்துவது போன்ற காட்சிகள் இடம்பெடுறுள்ளது.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து விஜய் டிவியில் நடந்து வரும் 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமான கெட்அப்பில் வந்து தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வந்தவர் வனிதா விஜயகுமார். குறிப்பாக இவர் சமீபத்தில் எடுத்த காளி அவதாரத்துக்குப் பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால் அது தான் தன்னுடைய கடைசி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியாக இருக்கும் என்பதையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த கையேடு...  திடீர் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார். இவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்... பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனக்கு அங்கு நல்ல மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டதோடு அவமானப்படுத்தப்பட்டேன், இதற்கு அவரது திமிர் காரணமாக இருக்கலாம், அல்லது அவரால் எனது தொழில் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இருக்கலாம்.

வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் தான் மோசமாக நடத்துகின்றனர். பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்க நினைக்கிறார்கள். இருப்பினும் நான் எனது திரைப்பட வேலைகளில் பிசியாக இருப்பதால் தொடர்ந்து நீங்கள் என்னைத் திரைப்படங்களில் பார்க்கலாம்.

என்னை விட எல்லா விதத்திலும் மூத்த நபர் அவர், கடுமையாக உழைத்து முன்னேறியவர். முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் தாழ்மையோடு பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது. குறிப்பாக நீண்ட நாட்களின் போராட்டத்துக்குப் பின், குடும்பம், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார். பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை கெடுக்க கூடாது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

மேலும் வனிதா கூறியது நடிகை ரம்யா கிருஷ்ணனை தான் என, தகவலும் வெளியானது. இதுகுறித்து ரம்யா கிருஷ்ணனிடம் கேட்ட போது இது ஒரு பிரச்சனையே இல்லை என, பளீச் என பதில் கொடுத்தார். இந்நிலையில், இவர்களுக்குள் நடந்த பிரச்னையை தெரிவிக்கும் விதமாக ஒரு புரோமோ வெளியாகியுள்ளது. அதில் வனிதாவின் காளி நடனத்திற்கு ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய கருத்தை சொன்ன போது, தன்னை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம் என வனிதா கூறுவதும், இது ஒரு போட்டி... யாருடனும் ஒப்பிட கூடாது என யார் சொன்னது என ஆக்ரோஷமாக கத்துகிறார். வனிதாவும் மைக்கை கொடுத்து விட்டு வெளியே செல்வது போல் இந்த புரோமோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vijay Trisha: காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய்-த்ரிஷா.! தடையாக இருந்த அந்த நபர்..! குட்டி பத்மினி ஓபன் டாக்!
Yash Net Worth : 300 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய KGF யஷ்ஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?