
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பைக்கர்ஸை பட்டை உரிக்கும் காவலராக வந்து மாஸ் காட்டுகிறார் அஜித்குமார். இதில் காவல்துறை அதிகாரியாய் வரும் அஜித் லாக்கப்பில் வைத்து வில்லன் கேங்கை வெளுத்து வாங்க அப்போது மற்றோரு காவலர் தவறு செய்தவர்களை என்கவுண்டரில் போட கூறுகிறார். ஆனால் அஜித் 'உயிரை எடுக்கும் உரிமை நமக்கில்லை' என கூறும் டைலாக் சமீபகாலமாக நடைபெறும் காவல்துறை சார்ந்த கொலைகளை மையப்படுத்துவதாகவே உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே ஜெய் பீம் படத்தில் லாக்கப் டெத் குறித்த சூர்யாவின் டைலாக் எவ்வாறு மாஸ் வெற்றி பெற்றதோ அதே அளவு சர்ச்சைக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.