ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த 'வலிமை' படக்குழு..!! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..?

Published : Sep 02, 2021, 03:36 PM IST
ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த 'வலிமை' படக்குழு..!! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..?

சுருக்கம்

'வலிமை' படத்தில் மீதமிருந்த சண்டை காட்சியை எடுத்து முடிக்க கடந்த மாதம்  'வலிமை' படக்குழு, 'ரஷ்யா' சென்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை வந்த கையேடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சில தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.  

'வலிமை' படத்தில் மீதமிருந்த சண்டை காட்சியை எடுத்து முடிக்க கடந்த மாதம்  'வலிமை' படக்குழு, 'ரஷ்யா' சென்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை வந்த கையேடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சில தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, 'நேர்கொண்ட பார்வை' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான 'வலிமை' குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார்.

 

இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.  மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு... அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை கட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. இந்நிலையில், கடந்த மாதம் சுமார் அஜித் உட்பட 20 பேருடன் படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். ஒரே வாரத்தில் படப்பிடிப்பை எடுத்து முடித்துவிட்டு இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தாமதம் ஏற்பட்டது. 

தற்போது இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், வலிமை படத்தின் சண்டை காட்சி எடுத்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, படக்குழுவினர் மாஸ்கோவில் இருந்து நேரடியாக சென்னை வரும் விமானத்தின் வர உள்ளதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை படக்குழுவினர் சென்னை வருவார்களாம். அவர்கள் சென்னை வந்த பின்னர், வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்