Valimai Trailer:வலிமை அடுத்தவனை காப்பாத்ததான் அழிக்க இல்ல.. கெத்து காட்டும் வலிமை வசனம்..

Published : Dec 30, 2021, 07:17 PM ISTUpdated : Dec 30, 2021, 07:21 PM IST
Valimai Trailer:வலிமை அடுத்தவனை காப்பாத்ததான் அழிக்க இல்ல.. கெத்து காட்டும் வலிமை வசனம்..

சுருக்கம்

அனைவரும் எதிர்பார்த்திருந்த அஜித் நடிப்பில் திரைக்கு வர உள்ள வலிமை படத்தின் டிரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் அஜித்தின் பட்டை கலக்கும் வசனங்களுடன் டிரைலர் வெளிவந்துள்ளது. 

அனைவரும் எதிர்பார்த்திருந்த அஜித் நடிப்பில் திரைக்கு வர உள்ள வலிமை படத்தின் டிரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் அஜித்தின் பட்டை கலக்கும் வசனங்களுடன் டிரைலர் வெளிவந்துள்ளது. ’வலிமை என்பது அடுத்தவனை அழிக்க இல்லை, காப்பாற்றதான்’ ‘கொல்ற உரிமை நமக்கு இல்லை’ ’உழைத்து சாப்டுறவங்களை கேவலபடுத்தாத’போன்ற படத்தின் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்வையாளர்களின் கண்களை கட்டிப்போட்டு வைக்கும் பைக் ஓட்டும் சீன்களில் பை ரேஸரான அஜித் தனது முழு திறமையையும் காட்டியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு காட்சிகள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பாதிப்பு , படப்பிடிப்பின் போது காயம் என பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனாலும் ஒரு வழியாக இந்த ஆண்டு வெற்றிகரமாக படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து இந்தப் படத்தின்  ' நாங்க வேற மாறி' பாடல் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த பாடல்  யூடியூப் இணையதளத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனையடுத்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.  இந்நிலையில்  வலிமை படத்தின் 2-வது பாடலாக அம்மா குறித்தான பாடனை படக்குழு  கடந்த 4 ஆம் தேதி வெளியிட்டது. யுவன் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் சித்ஸ்ரீராம் இப்பாடலை பாடியிருந்தார். இந்த  பாடலும் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது.

இப்படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த 14 ஆம் தேதி  வெளியானது.யாரும் எதிர்ப்பாராத வகையில் அமைந்த இந்த மேக்கிங் வீடியோ சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் " பெரிதாக ஒன்று வரப்போகிறது " என தெரிவித்து இருந்தனர்.  இந்த நிலையில் இன்று காலை அவர்கள் டுவிட்டர் பதிவில் " இனியும் அமைதியாக இருக்க முடியாது. காத்திருந்த நேரம் முடிந்து விட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் " என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் முதல் அனைவரும் எதிர்பார்த்து இருந்த வலிமை பட டிரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. கலக்கும் வசனங்களுடன் வெளியாகியுள்ள வலிமை பட டிரைலர் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பைக்கர்ஸை பட்டை உரிக்கும் காவலராக வந்து மாஸ் காட்டுகிறார் அஜித்குமார். நேர்கொண்ட பார்வையில் அஜித்தின் மாஸ் போதவில்லை என நினைத்தவர்களுக்கு சரியான விருந்தாக இந்த படம் அமையும் என்பதை வலிமை ட்ரைலர் வெளிப்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!