இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது! கவிதையால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து!

By manimegalai aFirst Published Jul 22, 2019, 4:56 PM IST
Highlights

இந்தியவை பெருமை பட வைக்கும் விதமாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சரியாக 2 .43 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து,  சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர். 
 

இந்தியவை பெருமை பட வைக்கும் விதமாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சரியாக 2 .43 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து,  சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர். 

விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடத்தில், சந்திரயான்-2 விண்கலம் அதன் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது அவர்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த, வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின், இந்த சாதனை குறித்து,  கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், 
"130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.
“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”.
இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி
இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது". என கவிநயத்துடன் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 

130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.
“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”.
இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி
இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது.

— வைரமுத்து (@vairamuthu)

 

click me!