இஸ்லாமியர்கள் எல்லோருமே என் தாய்மாமன்கள் தான்... வைரமுத்து நெகிழ்ச்சி..!

Published : Sep 02, 2019, 01:22 PM IST
இஸ்லாமியர்கள் எல்லோருமே என் தாய்மாமன்கள் தான்... வைரமுத்து நெகிழ்ச்சி..!

சுருக்கம்

மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப்பெரிய வன்முறை, என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.   

மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப்பெரிய வன்முறை, என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

மறைந்த பாஜக தலைவர் வாஜ்பாய் பின்பற்றிய மதநல்லிணக்கத்தை அவரின் பின் வந்த தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் மத நல்லிணக்க மாநில மாநாடு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, ''மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதத்தில் கூட்டம் நடத்துவதே நாகரிகத்தில் எங்கோ கறை பட்டிருக்கிறது என்பதை நான் உணர்த்துகிறேன்.

மத நல்லிணக்கம் தான் நம் மண்ணின் மாண்பு. நான் பிறந்து வளந்த பெரியகுளத்தில் இருப்பதோ தாய்மாமன்கள் இரண்டு பேர் தான். ஆனால் இஸ்லாமியர்களில் எல்லாருமே என் தாய்மாமன்களாக தான் திகழ்ந்தார்கள். பாஜக தலைவர் வாஜ்பாயிடம் பார்த்த மதநல்லிணக்கத்தை அவருக்கு பின் வந்த தலைவர்களிடமும் இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோளாக இருக்கிறது.

இந்துக்கள் காக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வேட்கயாக உள்ளதோ, அதோ போல் இந்தியர்கள் காக்கப்பட வேண்டும். திணித்தல் தான் தவறு, உடல் மீது உடல் திணிக்கப்படுவது, மதம் மீது மதம் திணிக்கப்படுவது, மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப்பெரிய வன்முறை. நிலவில் இந்தியா இறங்கிய இந்நேரத்தில், இந்தியனை பாதாளத்தில் இறக்கி விட வேண்டாம்’’ என வேண்டுகோள் விடுத்தார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!