விடாமல் பேச முயற்சிக்கும் வைரமுத்து! நோ சொல்லி என்ட் கார்டு போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

Published : Oct 24, 2018, 09:23 AM ISTUpdated : Oct 24, 2018, 09:25 AM IST
விடாமல் பேச முயற்சிக்கும் வைரமுத்து! நோ சொல்லி என்ட் கார்டு போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

சுருக்கம்

மீ டூ சர்ச்சையில் பெயர் அடிபட்டு வரும் வைரமுத்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்பு கொண்டு பேச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மீ டூ சர்ச்சையில் பெயர் அடிபட்டு வரும் வைரமுத்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்பு கொண்டு பேச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. வைரமுத்து குறித்து சின்மயி கூறிய பாலியல் புகாரை தொடர்ந்து ஏராளமான பெண்களும் வைரமுத்துவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்பாவி பெண்கள் பலரையும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறியே வைரமுத்து கவிழ்க்க முயற்சித்தது மீ டூ விவகாரம் மூலம் தெரியவந்தது. 

தனது இச்சையை தீர்த்துக் கொள்ள ஏ.ஆர்.ரஹ்மானுடனான பழக்கத்தை வைரமுத்து பயன்படுத்திக் கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் ஏ.ஆர்.ரஹ்மான் காதுகளுக்கும் சென்றது. அதனை தொடர்ந்தே மீ டூ புகார்தாரர்கள் மற்றும் புகாருக்கு ஆளானவர்கள் பெயர்களை கேட்கும் போது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருந்தார். மேலும் தனது வொர்க் பிளேசில் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் இருப்பதையே தான் விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். 

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைக்குரிய நபர்களை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை. சர்ச்சைக்குரிய நபர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை வைரமுத்து ஒதுக்கி வைப்பது வழக்கம். அந்த வகையில் வைரமுத்துவுடன் இனி இணைந்து பணியாற்றப்போவதில்லை என்கிற முடிவுக்கு ரஹ்மான் வந்துவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் பெண்கள் பலரிடம் வைரமுத்து தனது பெயரை பயன்படுத்தியிருப்பதும் ரஹ்மானுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் தனது மீ டூ பிரச்சனை ரஹ்மான் வரை சென்றுவிட்டதை அறிந்து வைரமுத்து மிகுந்த டென்சன் ஆகியுள்ளார். அதிலும் தான் ரஹ்மான் பெயரை தவறாக பயன்படுத்தியதாக வெளியான தகவல்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் ரஹ்மானை தொடர்பு கொண்டு வைரமுத்து விளக்கம் அளிக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. 

இதற்காக வைரமுத்து ரஹ்மானின் பெர்சனல் நம்பரில் தொடர்பு கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அழைப்பை ரஹ்மான் ஏற்கவில்லை என்றும் தொடர்ந்து ரஹ்மான் உதவியாளர்களை வைரமுத்து அழைத்த போதும் ரஹ்மானை வைரமுத்தால் ரீச் ஆக முடியவில்லை. தற்போதைய சூழலில் சர்ச்சைக்குரிய வைரமுத்துவிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்