
தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.
இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதையர், பாரதியார், பாரதிதாசன், கலைஞர், மறைமலையடிகள், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் என்று 17 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார்.
18ஆம் படைப்பாகக் கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றுகிறார்.
நாளை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராசர் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது. தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் போன்றோர் கலந்து கொள்கிறார்.
மேலும் ஜூலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளாகும். தன் ஒவ்வொரு பிறந்தாளிலும் சிறந்த கவிஞர் ஒருவருக்குக் ‘கவிஞர்கள் திருநாள்’ விருது வழங்கி வருகிறார் கவிஞர் வைரமுத்து. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருது மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படுகிறது. 25,000 ரூபாய் ரொக்கமும், ஒரு பட்டயமும் சால்வையும் கொண்டது அந்த விருது.
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் 13ஆம் தேதி காலை 10 மணி அளவில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில், வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், ராஜசேகர், காதர்மைதீன், உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.