நடிக்க முடியாது... பிரமாண்ட இயக்குனருக்கு பதிலடி கொடுத்த வடிவேலு..!

First Published Apr 16, 2018, 5:32 PM IST
Highlights
vadivelu worte letter for nadigar samgam


வைகை புயல் வடிவேலு, ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படம் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', இந்தப்படத்தை தொடந்து இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்திலேயே, பிரமாண்ட இயக்குனர் சங்கர் தயாரிப்பில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருந்தது. இதிலும் கதாநாயகனாக வடிவேலு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி 2' படத்தில் நடிக்க மறுத்தால் வடிவேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறப்பட்டது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறப்பட்டது. 

தற்போது இதற்கு கடிதம் மூலம் பதில் கொடுத்துள்ள வடிவேலு, 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2 படத்தில் நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளதாக பிரமாண்ட இயக்குனருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க தான் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு விடும் என்றும் படக்குழுவினர் கூறியதோடு மற்றப்படங்களில் நடிக்க கூடாது என கூறினார் அதை தான் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் சொன்னப்படி டிசம்பர் மாதம் வரை படப்பிடிப்பு துவங்காததால் தன்னை தேடி வந்த மற்ற பட வாய்ப்புகளை இழந்தது மட்டும் இன்றி, பொருளாதார இழப்பும் மன உளைச்சலுக்கும் ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எஸ். பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தில் நடிகர் சங்கத்தலைவர் நாசரும் நடித்து வருவதால் அவர் செயல் பட முடியாத நிலையில் இருப்பதாகவும், இறுதியில் இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்க முடித்த நிலையில் இருப்பதாகவும், அப்படி கொடுத்தால் தற்போது தான் நடித்து வரும் மற்ற படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தனது விளக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் வடிவேலு மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் வடிவேலு பதில் கடிதம் குறித்தும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முடிவு செய்யப்படும் என்று நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

click me!