ஆண்ட்ரியாவை காதலித்து ஏமாற்றிய அரசியல் வாரிசு இவரா...?? நம்பவே முடியவில்லை...!!

Published : Dec 26, 2019, 04:09 PM ISTUpdated : Dec 26, 2019, 04:10 PM IST
ஆண்ட்ரியாவை காதலித்து ஏமாற்றிய அரசியல் வாரிசு இவரா...??  நம்பவே முடியவில்லை...!!

சுருக்கம்

அதனால் தைரியமாக  அவர்கள் மத்தியில் நான் ஒரு கவிதையை வாசித்தேன் ,  அந்த கவிதை குறித்து அவர்கள்  கேட்டதற்கு இது என்னுடைய மோசமான காதல் பற்றியது என கூறினேன்

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா வை பிரபல அரசியல் வாரிசு ஒருவர் ஒரு காதலித்து ஏமாற்றியதாக வெளியான தகவல் குறித்து  அது யார் என்ன விவரம் என்பவைகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்  நடிகை ஆண்ட்ரியா இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழ் திரையுலகில் நடிகை ஆண்ட்ரியாவை தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவுக்கு தனது குரல் வளத்தாலும்,   நடிப்பாலும்  இளம் தலைமுறையினர்  மனதில் இடம்பிடித்துள்ளார் ஆண்ட்ரியா .

மிகப்பிரபலமான இவருக்கும் ஒரு அரசியல் வாரிசுக்கும் இடையே  காதல் ஏற்பட்டு அதில் ஆண்ட்ரியாவுடன் அந்த நபர்  உல்லாசமாக இருந்து பின்னர் அவரை அந்த அரசியல்வாரிசு  ஏமாற்றிவிட்டார் எனவும்,  தன்னை ஏமாற்றிய  அந்த நபரை ஆண்ட்ரியா அம்பலப்படுத்தப் போகிறார் எனவும்  தகவல்கள் வேகமாக பரவியது. இந்நிலையில் தனியார்  நிகழ்ச்சிகளில் பாடும் அவர், காதல் தோல்வி  கவிதைகள் மற்றும் காதல் தோல்வி பாடல்களை பாடி வேதனையை வெளிப்படுத்திவருகிறார். எனவும்,  தனது காதல் தோல்வி தொடர்பாகவும்,  அதில் தன்னை  ஏமாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான நபரை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள ஆண்ட்ரியா அதை வெளியிட்டு அந்த அரசியல் வாரிசை அம்பலப்படுத்தப் போகிறார் எனவும் தகவல்கள் பரபரத்தன.   இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  இது குறித்து மனந்திறந்து பேசியுள்ள ஆண்ட்ரியா,  '' நான் அன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில்  பத்திரிக்கையாளர்கள் ஒளிப்பதிவாளர்கள்  கேமரா இல்லாமல் இருந்தார்கள். 

அதனால் தைரியமாக  அவர்கள் மத்தியில் நான் ஒரு கவிதையை வாசித்தேன் ,  அந்த கவிதை குறித்து அவர்கள்  கேட்டதற்கு இது என்னுடைய மோசமான காதல் பற்றியது என கூறினேன் அதுதான் நான் செய்த தவறு...  அது நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்,  பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் பேசியதை இப்போது சிலர் திட்டமிட்டு திரித்து  தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் . என்னை காதலித்தவர் நடிகர் என்கின்றனர்  அவர் ஒரு அரசியல் வாரிசு என்றெல்லாம் கிளப்பி விடுகிறார்கள் .   அதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு கோபம் தான் வருகிறது இத்தனை நாடுகளாக  அதற்கு எப்படி விளக்கம் கொடுப்பது என தெரியாமல் அமைதியாக இருந்துவிட்டேன் என மனம் திறந்து கூறியுள்ளார் ஆண்ட்ரியா. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்