அரசியலில் ஏன் ஈடுபடவில்லை...? உதயநிதி கொடுத்த அதிரடி பதில்...

 
Published : May 09, 2017, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
அரசியலில் ஏன் ஈடுபடவில்லை...? உதயநிதி கொடுத்த அதிரடி பதில்...

சுருக்கம்

udhayanithi about political issues

நடிகரும், திமுக செயல் தலைவரின் மகனும் ஆன உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை வெளிப்படுத்தும் விதத்தில் 'சரவணன் இருக்க பயமேன்' என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள அவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு  பேசினார்.

அப்போது,  இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமா இருக்கும் என்றும், தற்போதைய அரசியல் குறித்தும் இந்த படத்தில்  காட்சி படுத்தப்பட்ட  காட்சிகள் குறித்தும் பேசியுள்ளார்.

மேலும், சமீபத்துல தர்மாக்கோல் வைத்து நீர் ஆவியாவதை தடுத்த ஒரு அரசியல் பிரபலம் குறித்தும் பேசினார். அதே போல அரசியலில் ஏன் நீங்கள் ஈடுபட வில்லை என தொகுப்பாளர் கேட்டதற்கு... பின் தினமும் என்னையும் வைத்து விவாத நிகழ்ச்சி நடத்திவிடுவீர்கள் என அதிரடியாக கூறினார்.

முதல் முறையாக அரசியல்வாதியாக உதயநிதி நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 12 தேதி ரிலீசாக உள்ளது, இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். மேலும் முதல் முறையாக சூரி இந்தப்படத்தில் உதயநிதியுடன் காமெடி காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!