நிவேதா பெத்துராஜைக் கைகழுவி விட்டு மேகா ஆகாஷைக் கைப்பிடிக்கும் உதயநிதி ஸ்டாலின்...

Published : Sep 24, 2019, 11:07 AM IST
நிவேதா பெத்துராஜைக் கைகழுவி விட்டு மேகா ஆகாஷைக் கைப்பிடிக்கும் உதயநிதி ஸ்டாலின்...

சுருக்கம்

திமுகவில் இளைஞரணித் தலைவர் பதவி வழங்கப்பட்ட பிறகு சினிமாவில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்த உதயநிதி ஏற்கனவே தொங்கலில் கிடக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’படத்துக்கும் மீண்டும் கால்ஷீட் தரவுள்ளார். அதுபோக பெண்டிங்கில் கிடக்கும் மு.மாறனின் ‘கண்ணை நம்பாதே’, கே.எஸ்.அதியமானின் ‘ஏஞ்சல்’படங்களையும் துவக்கும் திட்டமும் உதயநிதியிடம் உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் இனி முழு நேர அரசியலில் மட்டுமே ஈடுபடுவார்,  சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு துக்கச் செய்தி. சினிமாவை விட்டு இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் இல்லை என்று அறிவித்திருக்கும் உதயநிதி ‘தடம்’இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

திமுகவில் இளைஞரணித் தலைவர் பதவி வழங்கப்பட்ட பிறகு சினிமாவில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்த உதயநிதி ஏற்கனவே தொங்கலில் கிடக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’படத்துக்கும் மீண்டும் கால்ஷீட் தரவுள்ளார். அதுபோக பெண்டிங்கில் கிடக்கும் மு.மாறனின் ‘கண்ணை நம்பாதே’, கே.எஸ்.அதியமானின் ‘ஏஞ்சல்’படங்களையும் துவக்கும் திட்டமும் உதயநிதியிடம் உள்ளது.

இதில் மகிழ் திருமேனியின் புதிய படத்துக்கு மட்டும்தான் இன்னும் நடிகர்,நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அது குறித்த டிஸ்கஷனில் கதாநாயகியின் பெயராக நிவேதா பெத்துராஜை மகிழ் திருமேனி சிபாரிசு செய்ய பதறிப்போன உதயநிதி,’அவங்க வேண்டவே வேண்டாம். வேணும்னா மேகா ஆகாஷைக் கமிட் பண்ணுங்க’என்று சொன்னாராம். கவுதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் அறிமுகமாகி அப்படம் இன்று வரை ரிலீஸாகாத நிலையிலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் மேகா ஆகாஷ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேங்கப்பா... பராசக்தி படத்தின் ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?
காந்தா முதல் பைசன் வரை.... 2025-ம் ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்..!