
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்புடன் இரண்டு காவலாளர்கள் செல்பி எடுத்து காவல்துறை மானத்தை கப்பல் ஏற்றியுள்ளனர்.
மலையாள நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கொச்சியில் உள்ள அலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.
523 எண் சிறையில் ஐவரில் ஒருவராக திலீப் அடைக்கப்பட்டிருக்கிறார். நடிகர் என்பதால் அவருக்கு எந்த சலுகையும் செய்து தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திலீப்பை சிறையில் அடைக்கும் முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டார். அப்போது அங்கு திலீப்புடன் இரண்டு காவலாளர்கள் சென்றனர். அந்த இரண்டு காவலாளர்களும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடிகர் திலீப்புடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நடிகர் திலீப் மறுப்பு ஏதும் கூறாமல் புன்னகையுடன் அந்த காவலாளர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
நடிகர் திலீப்புடன் இரண்டு காவலாளர்கள் எடுத்துக் கொண்ட செல்பியானது சமூக வலைதளங்களில் பரவுகிறது.
இந்தப் புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் காவல்துறையை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
காவல்துறையினரின் மானத்தை கப்பலேற்ற வெளி ஆட்கள் தேவையில்லை. அந்த கடமையை காவல்துறையே செவ்வண்ணம் செய்கிறது. அந்த காவலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து கலங்கத்தை போக்குமா காவல்துறை? பார்ப்போம்…
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.