
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் அந்த கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே என் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில் மூன்றாவது பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் வீட்டில் வருமான வரி சோதனை செய்த அருண. ராஜக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துள்ளார் விஜய். இந்த அருண் ராஜ் யார்? அவர் பின்னணி என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அருண் ராஜ் ஒரு மருத்துவர் ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த அவர் கிருஷ்ணகிரி மாவட்ட கிராமப்புறங்களில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மருத்துவராக இருந்த போதிலும் நிர்வாக பணி மீது ஆர்வம் இருந்ததால் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மீது கவனம் செலுத்தினார். 2009 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்த அவர் ஐ.ஆர்.எஸ் பணியை தேர்வு செய்தார். பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பணியாற்றிய அவர், தமிழ்நாட்டிலும் வருமான வரித்துறையில் பணியாற்றியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாட்டில் இருந்து பீகாரருக்கு மாற்றப்பட்ட அருண் ராஜ் அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்று, தற்போது விஜயின் தவெகவில் இணைந்துள்ளார். அருண்ராஜ் தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரியாக இருந்தபோது பல ரெய்டுகளை நடத்தி இருக்கிறார். அதில் ஒன்றுதான் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு. விஜய் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டு காரணமாக மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகளும் பாதியில் நிறுத்தப்பட்டது.
ரெய்டு நடத்திய அதிகாரிகள் குழுவில் அருண் ராஜ் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னரே அருண் ராஜ்க்கு விஜயுடன் நெருக்கம் ஏற்பட்டு, தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அருண் ராஜ் பரிந்துரைத்த ஜான் ஆரோக்கிய சாமியை தான் தவெகவுக்கு திட்டங்களை வகுத்துக் கொடுப்பவராக விஜய் நியமித்ததாக கூறப்படுகிறது. ஜான் ஆரோக்கிய சாமியின் பரிந்துரையின் பேரில் தான் விக்கிரவாண்டி மாநாடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண் ராஜ் விஜய் வீட்டில் சோதனை நடத்திய போது விஜயின் வீட்டிற்குள் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.