
பிரபல சீரியல் நடிகை திவ்யா பட்னாகர் கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த சில வாரங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திவ்யா பட்னாகர், Yeh Rishta Kya Kehlata Hai என்கிற இந்தி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர். இதை தொடர்ந்து பல சீரியலில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன், கடுமையான காச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதிக மூச்சி திணறலால் அவதிப்பட்டு வந்த திவ்யா பட்னாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சுவாச குழாய் மூலம் ஆச்சிஜன் அளித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நிமோனியா பாதிப்பும் இவருக்கு ஏற்படவே.. இவரது உடல் நிலை மிகவம் மோசமானது. மேலும் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை.
பின்னர் இவருடைய குடும்பத்தினர், நேற்று இரவு 2 மணியளவில் வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கு சிகிச்சை கொடுக்க முயற்சி செய்தும், சிகிச்சை பலனின்றி... அதிகாலை 3 மணி அளவில் திவ்யா பட்னாகர் உயிரிழந்தார். இந்த தகவலை இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர். திறமையான நடிகையை இழந்து விட்டதாக இந்தி சீரியல் நடிகர் - நடிகைகள் பலர் இவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.