TTF Vasan Viral Video: காஸ்ட்லி பைக்குக்கு பதிலா வேற பைக்கை மாத்தி வசமா சிக்கிய டிடிஎஃப் வாசன்!!

By Kanmani P  |  First Published Oct 1, 2022, 4:18 PM IST

ஜிபி முத்துவை வைத்து அதிவேகமாக ஓட்டிய பைக்குக்கு பதிலாக வேறொரு பைக்கை போலீஸ் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் ஒப்படைத்ததாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து பல கண்டனங்களும் எழுதுகிறது.


கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஈசல் போல யூடியூப் சேனல் பிரபலங்கள் உருவாகிவிட்டனர். அவர்களில் ஒருவர் தான் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டுவதன் மூலம் இளைஞர்களை  கவர்ந்து விட்ட இவருக்கு ஏகபோக ரசிகர் பட்டாளம் உண்டு. சமீபத்தில் கூட தனது பிறந்த நாளை கொண்டாடிய இவரை காண ரசிகர்கள் குவிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இதையடுத்து  டிக் டாக் பிரபலமான ஜி.பி முத்துவை பைக்கில் வைத்து அழைத்துச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் ஜி.பி முத்து தனது வழக்கமான தூத்துக்குடி பானியில் மோசமான வார்த்தைகளை பேசுவதும்,  180 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக வாசன்  பைக் ஓட்டி  ஜி.பி முத்துவை அலற விட்டிருந்ததும் பதிவாகி இருந்தது.

Latest Videos

undefined

மேலும் செய்திகளுக்கு...திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இதுகுறித்து கோவை சூலூர், போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிவேகமாக பைக் ஓட்டுவது, மனித உயிருக்கு தீங்கு விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதியப்பட்டது. இது குறித்து செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை தொடர்ந்து வீடியோ ஒன்றில் பேசிய வாசன், செய்தி ஊடகங்கள் தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள் என்று குற்றஞ்சாட்டி பேசியிருந்தார்.

பின்னர் இவரை போலீசார் வலைவீசி  தேடி வந்தனர். இதற்கிடையே சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் அதிமேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் பைக் ஓட்டிய வழக்கில் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். பெங்களூரு தப்பி செல்ல முயன்ற நிலையில் அவரை சூலூர் போலீசார் இன்று மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் பிணையத்தில் விடுவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு...ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான வரவேற்பு... இதவிட பெரிய சந்தோஷம் இல்ல - விக்ரம் எமோஷனல் பேச்சு

இந்நிலையில் ஜிபி முத்துவை வைத்து அதிவேகமாக ஓட்டிய பைக்குக்கு பதிலாக வேறொரு பைக்கை போலீஸ் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் ஒப்படைத்ததாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து பல கண்டனங்களும் எழுந்துள்ளது..

click me!