ஜல்லிகட்டை தொடர்ந்து எதிர்ப்பேன் - நடிகை த்ரிஷா ஆணவம்

 
Published : Jan 14, 2017, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
ஜல்லிகட்டை தொடர்ந்து எதிர்ப்பேன் - நடிகை த்ரிஷா ஆணவம்

சுருக்கம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டவர் நடிகை த்ரிஷா

நேற்று அவர் படபிடிப்பு எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யபட்டது.

இதனால் ஆத்திரமடைந்த் த்ரிஷா ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விமர்சித்து ட்விட்டரில் ஆணவத்துடன் பதிவு செய்துள்ளார்.

தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டு ஏறுதழுவுதல். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடந்து வரும் இந்த போட்டியை காளைகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

மத்திய அரசு ஜல்லிகட்டுக்கு தடை விதித்தது. வீட்டில் குழந்தைகளோடு குழந்தைகளாக வளரும் காளைகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பினரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஜல்லிக்கட்டின் பாரம்பரியம் பற்றி தெரியாமலே பீட்டா அமைப்பின் பிரச்சாரத்தை கேட்டு சினிமா பிரபலங்கள் தனுஷ்,த்ரிஷா,ஜல்லிகட்டுக்கு எதிராக பேட்டி அளித்தனர்.

த்ரிஷா தொடர்ந்து ஜல்லிகட்டுக்கு எதிராக பேசி வருகிறார் என்ற கருத்து எழுந்தது.

இந்நிலையில் நேற்று த்ரிஷா - ஆர்யா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்றது.

இதை அறிந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

த்ரிஷா மன்னிப்பு கேட்கும் வரை ஓயமட்டோம் என்று ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

இதை கண்டு பயந்த த்ரிஷா கேரவனுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.

இந்நிலையில் அங்க வந்த போலீசார் படபிடிப்பை ரத்து செய்து எல்லோரையும் அனுப்பி வைத்தனர்.

படபிடிப்பு ரத்து, சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக படபிடிப்பு ரத்து செய்யபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனால் ஆத்திரமடைந்த த்ரிஷா தன் ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஆணவமாக "நான் என் நிலையில் இருந்து மாறமாட்டேன் என பதிவு செய்துள்ளார்.

பெண்களை தரக்குறைவாக பேசுவது தான் தமிழ் கலாச்சாரமா... கர்ஜனை படபிடிப்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடமிருந்து காப்பற்றிய படக்குழுவினருக்கு நன்றி" எனவும் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!