
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 'லங்கி பாய்ஸ்' மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகர் ராஜ்பிரியன், தான் நடித்துள்ள 'சீன்' திரைப்படம் வெளியானதை அடுத்து அங்குள்ள திரையரங்கிற்கு நேரில் வருகை தந்தார். திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்த்த அவருக்குப் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த ஆதரவாலேயே தான் இன்றைக்கு இந்த இடத்தில் இருப்பதாகக் கூறி ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.