
'சர்கார்' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், கடந்த மாதம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தாலும், இந்த போஸ்டரில், விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்ததால் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் இந்த கருத்துக்கு, பதிலடி கொடுக்கும் விதத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் தமிழ் சினிமாவில் பன்முக திறமையோடு விளங்கும் நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழக கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர்.
இது குறித்து அவர் பேசுகையில், 'நான் தம் அடிக்க மாட்டேன்... ஆனால் டிரம் அடிப்பேன் என்னை போல் டிரம் அடிக்க முடியும்மா என சவால் விட்டு டிரம் அடித்தே காண்பித்தார்.
மேலும், சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பது போல் காட்சி வந்தால், இதை பார்த்து மற்றவர்கள் புகைப்பிடிக்க கற்று கொள்வார்களா? என கேள்வி எழுப்பினார்.
அனைவரும் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் நீங்கள், கஞ்சாவை தடை செய்தது போல் உலகம் முழுவதும் புகையிலை மற்றும் பான்பராக் உள்ளிட்ட பொருட்களை தடை செய்யுங்கள். ஏன் நீங்கள் ஆட்சியில் இருந்த போது இதனை செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.