இவ்வளவு ஓபன்னாவா இருப்ப...! உடம்பை காட்டாமல் நல்ல உடையில் அந்த நடிகையை பார்க்கணுமாம்...! அதிரவைத்த டாப்ஸி...

Published : Nov 28, 2019, 09:44 PM IST
இவ்வளவு ஓபன்னாவா இருப்ப...! உடம்பை காட்டாமல் நல்ல உடையில் அந்த நடிகையை பார்க்கணுமாம்...! அதிரவைத்த டாப்ஸி...

சுருக்கம்

தமிழில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. வெள்ளாவி வெச்சு வெளுத்த பொண்ணாக தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த அவர், பாலிவுட்டிலும் தடம்பதித்தார். 

பல போராட்டங்களுக்கு பிறகு பாலிவுட் கொண்டாடும் நடிகையாக மாறியுள்ள டாப்ஸி, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். எதையும் வெளிப்படையாக துணிச்சலுடன் பேசும் குணம் கொண்ட அவர், அண்மையில் அதிரவைக்கும் கருத்தைக்கூறி இந்திய அளவில் ட்ரெண்டானார். 

சில தினங்களுக்கு முன்பு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் டாப்ஸி பங்கேற்றார். அங்கு ஆங்கிலத்தில் பேசிய அவரிடம் ஒரு செய்தியாளர், நீங்கள் இந்தி பட நடிகை தானே இந்தியில் பேசுங்கள் என்றார். 

அதற்கு டாப்ஸியோ, நான் இந்தியில் பேசினால் அனைவருக்கும் புரியாது. மேலும் நான் தமிழ், தெலுங்கு பட நடிகை கூட. அந்த மொழிகளில் வேண்டுமானால் பேசட்டுமா என்று கேட்டு நெத்தியடி கொடுத்தார். டாப்ஸியின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக, பலரும் அவரின் துணிச்சலை பாராட்டினர். 

இப்படி, தனது நடிப்பால் மட்டுமின்றி துணிச்சலாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் அவர், தற்போது ஒரு பேட்டியில் மற்றொரு அதிரவைக்கும் கருத்தைக்கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சியில் டாப்ஸி பங்கேற்றார். அப்போது, நேஹா சில கேள்விகளை அவரிடம் கேட்க மனதில் பட்டதை சொன்னார் டாப்ஸி. இதில், பாலிவுட்டில் எந்த நடிகைக்கு புது ஸ்டைலிஸ்ட் தேவை என்று நினைக்கிறீர்கள் என நேஹா கேட்க டாப்ஸியோ கொஞ்சம் கூட யோசிக்காமல் ஊர்வசி ரவ்தெலாவின் பெயரை கூறி அசரடித்தார். 

"ஊர்வசி ஃபிட்டாக உள்ளார். ஆனால் உடல் தெரியும்படியான உடைகள் இல்லாமல் நல்ல உடைகளில் அவரை பார்க்க விரும்புகிறேன்" என டாப்ஸி தெரிவித்துள்ளார். அவரது பதிலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், டாப்ஸியின் துணிச்சலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Sreeleela : 'ஆண்கள் மேல ஆசை இல்லை' நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக்! ஷாக்கிங் காரணம்
கான்ஜூரிங்கை மிஞ்சும் பயங்கரமான 5 திகில் படங்கள்!!