'துணிவு' படத்தில் இருந்து முக்கிய தகவல் ஒன்று டிசம்பர் 31ஆம் தேதி, வெளியாக உள்ளதாக பட குழுவினர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும், அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இரு படங்களுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதாலும், அஜித் - விஜய் என இரு நடிகர்களுக்குமே உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளதாலும், ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
விஜய் பட குழுவினர் மெட்ரோ ரயிலில், படத்தின் போஸ்டர் ஒட்டி ப்ரோமோஷன் செய்த நிலையில், அஜித்தின் படக் குழுவினர் ஒரு படி மேலே சென்று துபாயில் ஸ்கை டைவிங் செய்து 'துணிவு 'படத்தை புரமோட் செய்த வீடியோவை, இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரையுமே ஆச்சர்யத்தில் மூழ்கடித்தனர்.
இந்நிலையில் துணிவு படத்திலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி முக்கிய தகவல் ஒன்று வெளியாக உள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அது என்னவாக இருக்கும்? என்பதை தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.ஒருவேளை 'துணிவு' பணத்தின் டீசர், அல்லது 'ட்ரைலர்' வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பொதுவாக அஜித்தின் படங்களுக்கு பல வருடங்களாக எந்த ஒரு புரோமோஷன் பணிகளும் நடைபெறுவது இல்லை என்றாலும், இம்முறை பொங்கல் பண்டிகையை குறி வைத்து... விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் ,மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளதால், ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. அதன்படி ஜனவரி ஒன்றாம் தேதி இந்த படத்தின் பிரஸ் மீட் இருக்கலாம் என தகவல் பரவிய நிலையில், தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அந்த தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள் என இயக்குனர் எச்.வினோத் போட்டுள்ள பதிவு, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பன்மடங்கு எகிற வைத்துள்ளது.
Mark the date 31st !🔥 Day
— HVinoth (@HvinothDir)