மழைத்துளி இசையுடன் வெளியான தோழி...பிருந்தா மாஸ்டரின் முதல் படத்திலிருந்து வெளியான சிங்கிள்...

Kanmani P   | Asianet News
Published : Jan 27, 2022, 06:54 PM IST
மழைத்துளி இசையுடன் வெளியான தோழி...பிருந்தா மாஸ்டரின் முதல் படத்திலிருந்து வெளியான சிங்கிள்...

சுருக்கம்

பிருந்தா மாஸ்டர் இயக்கியுள்ள ஹே சினாமிகா படத்திலிருந்து செகண்ட் சிங்குளாக தோழி என்னும் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது.. 

மானாட மயிலாட புகழ் கலா மாஸ்டரின் தங்கை பிரிந்தா மாஸ்டருக்கு சினிமாவில் பல நண்பர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக குஷ்பு இவரது நெருங்கிய தோழி என்று கூறலாம். குஷ்பு மூலமாகத்தான் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


அதன் பிறகு கமலுடன் நம்மவர் படத்தில் சேர்ந்து நிர்மலா எனும் கதாபாத்திரத்தில் பிருந்தா மாஸ்டர் நடித்திருப்பார். 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தில் ஒரு பாடலுக்கு கோரியோகிராபர் ஆக பணியாற்றி இருப்பார்.

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா'. கொரோனா ஊரடங்குக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.

 

இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படம் வரும் பிப்ரவர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக அச்சமில்லை அச்சமில்லை  பாடல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது..இந்நிலையில் பிருந்தா மாஸ்டர் இயக்கியுள்ள ஹே சினாமிகா படத்திலிருந்து செகண்ட் சிங்குளாக தோழி என்னும் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது.. கோவிந்த் வசந்தா இசையில் மெல்லிசை பாடும் இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார்..இதன் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்..
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்