பிக்பாஸ் வீட்டில் இருவர் சேஃப்! வெளியேற்றப்பட்டது இவரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Published : Jul 14, 2019, 02:31 PM IST
பிக்பாஸ் வீட்டில் இருவர் சேஃப்! வெளியேற்றப்பட்டது இவரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

சுருக்கம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட வேண்டும் என்பது பிக்பாஸ் வீட்டின் நீதி. அதன்படி கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட வேண்டும் என்பது பிக்பாஸ் வீட்டின் நீதி. அதன்படி கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். 

அதே போல் இந்த வாரம், நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ள வனிதா, மதுமிதா சரவணன், மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய ஐந்து பேரில் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

 

வனிதா வெளியேறிவிட்டால், நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால், இந்த வாரம் மோகன் வைத்யா அல்லது சரவணன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் நபரை சாண்டி அறிவிப்பார் என கமல்ஹாசன் கூறினார். இதனை அடுத்து சாண்டி பிக்பாஸ் கவரை எடுத்துக் கொண்டு வந்து அதில் மோகன் வைத்யா பெயர் இருப்பதை அறிவித்தார். இதனை அடுத்து மோகன் வைத்யா கண்ணீருடன் மற்ற போட்டியாளர்களிடம் விடைபெற்று கிளம்ப தயாரானார்.

திடீர் திருப்பமாக சாண்டி அறிவித்த பெயர் வீட்டிலிருந்து வெளியேறும் நபரின் பெயர் அல்ல என்றும் வீட்டில் சேஃப் ஆக இருக்கும் நபரின் பெயர் என்றும் கமல்ஹாசன் கூறியதை தொடர்ந்து மோகன் வைத்யா மகிழ்ச்சியில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

எனவே 5 பேர்களில் மோகன் வைத்யா இந்த வாரம் சேஃப் என்பதால் மீதமுள்ள வனிதா, மீராமிதுன், சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய நான்கு பேர்களில் வெளியேறும் நபர் யார் என்பதை இன்று கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், மதுமிதா சேஃப் என கமலே அறிவிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய தினம்  வனிதா, மீராமிதுன், சரவணன் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளது. 

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை வனிதாவை தனி அறையில் வைத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே அனுமதிக்கும் சம்பவம் அரங்கேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பது இன்று தெரிந்துவிடும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்
OTT Releases : இதயம் முரளி முதல் வதந்தி 2 வரை... இந்த வாரம் ஓடிடியில் தூள் கிளப்ப வரும் படங்கள் & வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ