பிகிலை ஓடவைக்க திருட்டுத்தனம்... ப்ளூசட்டை மாறனை வைத்து விஜய் ரசிகர்கள் செய்த கேவலமான காரியம்..!

Published : Oct 25, 2019, 05:11 PM IST
பிகிலை ஓடவைக்க  திருட்டுத்தனம்... ப்ளூசட்டை மாறனை வைத்து விஜய் ரசிகர்கள் செய்த கேவலமான காரியம்..!

சுருக்கம்

பிகில் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்க அதனை சகித்து கொள்ள முடியாத விஜய் ரசிகர்கள் பல்வேறு தகிடுதித்தங்களை செய்து வருகின்றனர். 

அதில் ஒன்று பிரபல விமர்சகர் ப்ளூசட்டை மாறனின் வீடியோ. தனது தமிழ் டாக்கீஸ் பக்கத்தில் இன்னும் ப்ளூசட்டை மாறன் பிகில் பட விமர்சனத்தை இன்னும் பதிவேற்றவே இல்லை. அதற்குள் அவர் பிகில் படத்தை விமர்சனம் செய்தது போல் அதே தமிழ் டாக்கீஸ் பக்கத்தை அப்படியே காப்பியடித்து ஒரு வீடியோவை விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

அந்த வீடியோ ப்ளூசட்டை மாறன் தெறி படத்திற்கு கொடுத்த விமர்சனம். அதனை அப்படியே எடுத்து கட் செய்து பின்னணியில் பிகில் போஸ்டரை வைத்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. குரலுக்கும் வீடியோவுக்கும் பொறுட்ந்தி போகவே இல்லை. கூர்மையாக கவனித்தால் அது தெறிக்கு கொடுத்த விமர்சனம் என்பது தானு, ஜெமினி நிறுவனத்திற்கு படத்தை விற்றதாக ப்ளூசட்டை மாறன் கூறும்போது தெரிய வருகிறது. ஆனால் பிகில் படத்தை தயாரித்தது ஏஜி.எஸ்.எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம். 

அந்த வீடியோவில், விஜயை பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு கூட இந்தப்படத்தை பார்த்தால் இனி விஜயை பிடிக்க ஆரம்பித்து விடும். அந்த அளவுக்கு வெறித்தனமாக நடித்துள்ளார்.

 

விஜய் ரசிகர்களுக்கு இந்தப்படம் தீபாவளி விருந்தாக அமைந்திருக்கிறது.  5 பாட்டு, ரெண்டு ஹீரோயின் ரெண்டு பைட்டுனு நடிச்சிட்டு போறதை விட இந்தமாதிரியான படங்களில் நடிப்பது தான் விஜய்க்கு நல்லது. ஆழமான கருத்துக்களை எல்லாம் விஜய் மாதிரியான ஆட்கள் சொன்னால் தான் ஆடியன்ஸ்யே கேட்பார்கள். இதுவரை தமிழ்சினிமாவில் எந்த படத்திற்கு கிடைக்காத ஓபனிங் இந்தப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. பட்டி தொட்டிகளிலெல்லாம் கூட தியேட்டர்கள் நிரம்பி வழிகிறது. 

படம் வருமா வராதா? என்கிற சந்தேகத்துடனே படம் ஆரம்பித்தது முதல் எதிர்பார்ப்புகள் கிளம்பி வந்தது. படம் சென்சாராகி ரிசர்வேசன் தொடங்கிய பிறகும் கூட படம் ரிலீசாகுமா? என்கிற சந்தேகம் இருந்தது. அடுத்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் கம்பிகளை பிடித்துக் கொண்டு தவமாய் தவமிருந்தார்கள்’’என்றெல்லால் ப்ளூசட்டை மாறன் புகழ்ந்துள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?