படிதாண்டா பத்தினி ஜானகி தேவிகளும் ஏகபத்தினி விரதன்களும்... ’96 படம் குறித்து இப்படி ஒரு சர்ச்சை

Published : Oct 07, 2018, 01:44 PM IST
படிதாண்டா பத்தினி ஜானகி தேவிகளும் ஏகபத்தினி விரதன்களும்... ’96 படம் குறித்து இப்படி ஒரு சர்ச்சை

சுருக்கம்

இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றிகரமாக ஓடத்துவங்கும்போது அதைச்சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் கிளம்பத்துவங்கிடுகின்றன. விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த ’96 படம்தான் இந்த வாரத்தில் வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றிகரமாக ஓடத்துவங்கும்போது அதைச்சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் கிளம்பத்துவங்கிடுகின்றன. விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த ’96 படம்தான் இந்த வாரத்தில் வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

கதைப்படி 22 வருடங்கள் கழித்து சந்திக்கும் காதலர்கள் வி.சே.வும் த்ரிஷாவும் ஒருவரை தொட்டுக்கொள்ளாமலே படத்தின் இரண்டாவது பாதி நகர்கிறது. இது குறித்து சிலர் பெருமையாகவும் இன்னும் சிலர் நக்கலாகவும் பதிவிட்டுவரும் நிலையில் எழுத்தாளர் என்.கொற்றவையின் கூற்றைப் படியுங்கள்;

’’#96Movie காதலை அதீதமாக புனித்தப்படுத்தி ஏற்கனவே பிரச்சினையாய் இருக்கும் ஒரு சமூகத்தின் பிற்போக்கு மனநிலையை உயர்த்திப் பிடிக்கிறது... தொடுதல் குறித்து 7,8 ஆம் நூற்றாண்டு கால மதவாத பார்வையிலிருந்து பேசுகிறது..

ஆண் பெண் உறவை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை உருவாக்கவில்லை... அது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாகாத தான் இருக்க வேண்டுமென்பதில்லை... காதலுக்கும் காமத்திற்கும் இடையிலும் பேரன்பு சாத்தியமே. (காமம் தவறென்பதல்ல இதன் பொருள்.. எப்போதும் இருமை மட்டுமல்ல இருப்பு... பன்மைகளை கண்டறிய வேண்டும்).

ஆணும் பெண்ணும் ஒன்று காதலர்களாகவோ அல்லது கணவன் மனைவியாகவோ தான் இருக்க வேண்டுமென்பதில்லை... வேறு அன்புகளும் சாத்தியமே... உண்மையில் சேதுவின் அந்த சுமக்கும் காதல் திரிஷா மீதான வன்முறை... ஆணாதிக்க பிடிவாதம்... Blackmail

இறுதிக் காட்சியில் திரிஷா விமானம் ஏறுவதற்கு பதில் தன் கணவனுக்கு அழைத்து "xxx இவன் இன்னும் என்னையே நினைச்சுகிட்டு கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்... சீக்கிரமே இவனுக்கு பொண்ணு பாருங்க.. " இப்படி ஏதாவது பேசி உறவுகளில் ஒரு வெளிப்படைத் தன்மையை வளர்க்க வகை செய்திருக்கலாம்... குறைந்தபட்சம் சேதுவை கட்டிப்பிடித்து அழுதிருக்கலாம்... தொட்டால் ஒன்றும் கற்பு போய்விடாது (கற்பே ஒரு கற்பிதம்  என்றாவது பேசி.. அவனுடைய இறுக்கத்தை பிற்போக்கு மனநிலையை மாற்ற வகை செய்திருக்கலாம்..

இதையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இந்த சமூகத்தில் நிலவும் 'கள்ள உறவு' குறித்த குறுகுறுப்பை தூண்டிவிட்டு... பார்வையாளர்கள் மனதில் இருவருக்கும் இடையில் படுக்கையறை காட்சிகளை ஓடவிட்டு... ஆவலைத் தூண்டி... போலியாக ஒரு புனிதத்தை நிம்மதிக்காக நிறுவுகிறது... படி தாண்டா பத்தினி ஜானகி தேவிகளும்... ஏக பத்தினி (காதலி) விரதன் இராமன்களும் நிலவுடைமை சமூக பிம்பங்கள்... போலியானவர்கள்.... இது போன்ற புனிதங்கள் பெண்களின் உயிரை பறிக்கவும்... ஆண்களை கொலைகாரர்களாக மாற்றுவதிலும் தான் போய் தான் நிற்கும்.. அதுவே எனது அச்சம்.. கவலை...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்