தூத்துக்குடி சந்திப்பின் போது மன்னிப்பு கேட்ட விஜய்; காரணம் என்ன தெரியுமா?

First Published Jun 6, 2018, 3:08 PM IST
Highlights
this famous actor says sorry to the people for this reason


தூத்துக்குடியில் துப்பாகி சூட்டின் போது உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு, நேற்று நள்ளிரவில் நேரில் சென்றிருக்கிறார் விஜய். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது, 13 அப்பாவி மக்களின் உயிர் பறிபோனது, தமிழக மக்கள் மனதில் இன்னும் ஆறாத்துயராக இருக்கிறது.

இந்த சோகச் சம்பவத்தில் இருந்து, இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது முத்து நகரம். உயிரைக்கொடுத்து நம் மக்கள் போராடியதற்கு பலனாக, இப்போது ஸ்டெர்லை ஆலை நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் உயிரிழந்த மக்களின் உறவினர்களை, பல்வேறு அரசியல்வாதிகளும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஆனால் அவர்கள் எல்லோரும் மீடியாவின் வெளிச்சத்தில் வந்து சென்றனர். சம்பிரதாயமாக இருந்த அவர்களின் சந்திப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது, நடிகர் விஜயின் தூத்துக்குடி சந்திப்பு. விஜயின் தூத்துக்குடி சந்திப்பு மிகவும் ரகசியமாக நடைபெற்றது. அதுவும் நள்ளிரவில் தான் விஜய் பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கே சென்றிருக்கிறார்.

அவர்களின் சொந்த பந்தங்கள் எப்படி ஆறுதல் சொல்வார்களோ, அதே போல வீட்டில் ஒருவராக ஒன்றி ஆறுதல் கூறி இருக்கிறார் விஜய். அவர் அவ்வாறு ஆறுதல் கூற சென்ற போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் முதலில் மன்னிப்பு கோரி இருக்கிறார். “முதலில் இந்த நள்ளிரவில் உங்களை தொந்தரவு செய்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என கேட்ட அவர், இந்த துயரச்சம்பவம் நடந்த உடன் வந்து உங்களை சந்திக்காததற்கு, என்னை மன்னித்துவிடுங்கள். என கேட்டிருக்கிறார். அவரின் இந்த பண்பு அங்கிருந்த மக்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்கிறது.

click me!