யார் ஸ்ரீரெட்டி...? திரிஷா கூறிய பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்...!

 
Published : Jul 26, 2018, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
யார் ஸ்ரீரெட்டி...? திரிஷா கூறிய பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்...!

சுருக்கம்

thirusha about srireddy shocking answer

தெலுங்கு திரையுலகில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில், பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு ஏமாற்றியதாக ஒவ்வொருவரின் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.

ஒரு நிலையில் இவர் மீது கடும் கண்டனங்கள் எழ, தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து இவருடைய பெயரை நீக்கினர். இதனால் தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பு, அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இவரின் புகாரை பெரிதாக தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் கண்டு கொள்ளாததால், தற்போது இவருடைய கவனம் தமிழ் திரையுலகின் மீது திரும்பியுள்ளது. 

இதுவரை கோலிவுட் திரையுலகை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள் மீது ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு நியாயம் கிடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

அதே போல் நடிகைகள் திரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட நடிகைகளின் பட்டியலில் உள்ளவர்கள் எனக்கு இருப்பதை விட அதிகம் என கூறி மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தினார் ஸ்ரீரெட்டி.

காஜல்: 

இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே பதில் கொடுத்துள்ள, நடிகை காஜல், இதுவரை தனக்கு, அது போல் நடந்தது இல்லை என்றும், தனக்கு தெரிந்த வரை, திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட தெரியாது என தெரிவித்தார்.

திரிஷா:

இந்நிலையில், ஸ்ரீரெட்டி பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகை திரிஷா... 
தனக்கு 'ஸ்ரீரெட்டி யார் என்றே தெரியாது? என கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்'. மேலும் ஸ்ரீரெட்டியையெல்லாம் பெரிய ஆளாக்க வேண்டாம்’ என காட்டமாக கூறினார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு சக நடிகை பற்றி தனக்கு தெரியவே தெரியாது என கூறியுள்ளார். இதனால் பலருக்கு திரிஷா எதையோ மறைப்பது  போல் தோன்றுவதாக கூறிவருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!