அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கிறது 'அறம்' ... பிரபல அரசியல் தலைவர் நெகிழ்ச்சி! 

 
Published : Nov 11, 2017, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கிறது 'அறம்' ... பிரபல அரசியல் தலைவர் நெகிழ்ச்சி! 

சுருக்கம்

thirumavalavan about aram movie

'அறம்' படத்தின் மூலம் தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என மீண்டும் அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறார் நடிகை நயன்தாரா. நேற்று அவரது நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது 'அறம்' திரைப்படம்.

இந்தப் படம் வெளியான முதல் நாளே இயக்குனர் கோபி மற்றும் படக்குழுவினரோடு இணைந்து படம் பார்த்தார் பிரபல அரசியல் தலைவர் தொல்.திருமாவளவன். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'அறம்' படத்தை தான் பார்த்த காரணம் 'அறம்' என்ற தலைப்பும் இயக்குனர் கோபியையும் தனக்கு மிகவும் பிடிக்கும்... என்பதால் தான். படத்தை பார்த்த பிறகு படமும் மிகவும் பிடித்து விட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'அனைவருக்கும் புத்தி சொல்கிற அருமையான படம் என்றும், இந்த படம் அறம் உள்ளவர்களால் ஆய்வு செய்யப்பட்டால் கண்டிப்பாக பல்வேறு விருதுகளை வாங்கி குவிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், 'அறம்' சமூக அக்கறை, மனிதநேயம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வலிவுறுத்துகிறது என்றும், அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்டையடி கொடுக்கும் விதத்தில் இந்த படத்தின் வசனங்கள் இருக்கிறது என்றும் கூறினார்.

 

அதே போல் நயன்தாரா இந்த படத்தில் தன்னுடைய நடிப்பை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், அரசியல் வாதிகளை குற்றம் சாட்டும் வகையில் இந்த படத்தில் ஒரு சில வசனங்கள் இருந்தாலும் இந்த படத்தை துணிந்து தயரித்த தயாரிப்பாளர் ராஜேஷ்,  அருமையான கதையை திரைப்படமாக எடுத்த இயக்குனர் கோபி, மற்றும் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு