
கபாலிக்குப் பிறகு ரஜினி - ரஞ்சித் இணைகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை விட காலா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களின் பி.பி.ஐ. தாறுமாறாக எகிறச் செய்துள்ளது.
காலா என்ற பெயருடனும், கரிகாலன் என்ற அடைமொழியோடும் வரவிருக்கும் காலா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதும் ஒட்டுமொத்த தமிழகமே படத்தின் கதைக்களத்தின் குறியீடுகளைத் தேடியது.
ஒரு திரைப்படத்திற்கு கதைக்களம் எவ்வளவு முக்கியமோ..! அதைப் போன்று பர்ஸ்ட்லுக்கும் வெயிட்டாக இருக்க வேண்டும்... ரஜினி என்ற பிரம்மாண்டத்துக்கு பர்ஸ்ட் லுக் தயாரிக்க வேண்டும் என்றால் எத்தனை மெனக்கெடல்கள் வேண்டும். தன் மேல் குவிந்த அத்தனை பாரங்களையும் ஒத்த போஸ்டரால் அடித்து துவைத்தெடுத்திருக்கிறார் டிசைனர் வின்சி ராஜ்.
காலா திரைப்படம் குறித்து வின்சி ராஜ் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். "தாராவில் வாழும் மக்களின் வாழ்வியலை அப்பட்டமாக காட்ட வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால் அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை அலங்கோலமாக காட்டாமல் அழகாக காட்ட வேண்டும் எனது விருப்பம். பிற மக்களைப் போல சந்தோஷமாக வாழும் தாராவி மக்களின் மறுபுறத்தை பிரதிபலிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்."
"காலாவுக்காக தாராவி சென்ற எங்கள் டீம் மொத்தமாக 60 வது புகைப்படங்களை எடுத்தது. அதில் 30 படங்களை முதற்கட்டமாக இறுதி செய்தோம்.அதில் இருந்து வடிகட்டப்பட்ட படங்களே வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக்குக்காக ரஜினியை இப்படி போஸ் கொடுங்கங்கள் என்று நாங்கள் கூறவில்லை. சூழ்நிலைகளை உற்றுக் கவனித்த ரஜினி, தானாக அளித்த போஸ்களை படமாகப் பிடித்தோம்."
"பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு ரஜினி சாரிடம் நான் பேசவில்லை. படத்தை ரஞ்சித் அவரிடம் காட்டியுள்ளார். இதன் பிறகு தொலைபேசியில் என்னை அழைத்த இயக்குநர் ரஞ்சித், தலைவர் பயங்கர ஹேப்பியா இருக்கார்னு சொன்னார். இந்த வார்த்தைகளை கேட்ட போது மேகத்தில் பறந்தது போன்றே உணர்ந்தேன்..."
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.