சாமி – 2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஏர்போர்ட்டில் நடந்துள்ளது; அதுவும் 26 வருடங்களுக்கு பிறகு….

 
Published : Oct 21, 2017, 10:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
சாமி – 2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஏர்போர்ட்டில் நடந்துள்ளது; அதுவும் 26 வருடங்களுக்கு பிறகு….

சுருக்கம்

The shooting of the Sami-2 film has taken place at this airport 26 years later ....

விக்ரம் நடித்து வரும் சாமி – 2 படத்தின் படப்பிடிப்பு 26 வருடங்களுக்குப் பிறகு டெல்லி பலம் விமான நிலையத்தில் நடந்துள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் தற்போது விக்ரம் நடிக்கும் வரும் படம் சாமி-2. பெரும் எதிர்ப்பார்ப்புகளை இப்போதே ஏற்படுத்திவிட்டது இந்தப் படம்.

இதன் படப்பிடிப்பு, டெல்லி பலம் விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பலம் விமான நிலையத்தில் விஜயகாந்த் நடித்த ‘மாநகர காவல்’ படத்தின் ஷூட்டிங்தான் கடைசியாக எடுக்கப்பட்டது. இந்தப் படம் 26 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.

தற்போது நடிகர் விக்ரமை வைத்து ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஷூட்டிங்கை அங்கு எடுத்துள்ளார் இயக்குனர் ஹரி.

சென்னையில் படப்பிடிப்பை நடத்தியப் பின்பு டெல்லிக்குச் சென்று படப்பிடிப்பை தொடங்கினார் இயக்குனர் ஹரி.

பிரபு, ஐஸ்வர்யா, விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து டெல்லியில் படப்பிடிப்பை நடத்தினார்.

மத்திய அமைச்சராக பிரபுவும், அவருடைய மனைவியாக ஐஸ்வர்யாவும் நடித்துள்ளனர். அவர்கள் விமான நிலையத்தில் பேசிக் கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு உள்ளது என்பது கொசுறு தகவல்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!