
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் மனமும் கோணாமல் நடந்துகொண்ட தர்ஷனை திடீரென 98 வது நாளில் வெளியேற்றியிருப்பது அநியாயமான செயல், பிக்பாஸ் தர்ஷன் விவகாரத்தில் மிகவும் பாரபட்சமாக நட்ந்துகொண்டுள்ளார் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். இதே கருத்தை தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நேற்று 98வது நாளின் திடீர் ட்விஸ்டாக தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு முன்பு இயக்குநர் சேரன், கவின் ஆகியோர் வெளியேற்றப்பட்டபோது எழுந்த கண்டனங்களை விட பல மடங்கு அதிக எதிர்ப்பு தர்ஷனின் வெளியேற்றத்துக்கு இருந்ததை வலைதளங்களில் காண முடிந்தது. இதுகுறித்து தனது எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இயக்குநர் சேரன்,...ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்..அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டியும்,...பிக்பாஸ் தர்ஷன் விவகாரத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளார். தர்ஷன் வின்னராக வெளியே வரவேண்டியவர். 98 நாட்களுக்கு அப்புறம் வெளியேறிய பின்னர் உன்னுடன் சேர்ந்து நான் எடுத்துக்கொண்டிருக்கும் இப்படம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.ஆனாலும் இன்னும் உனக்கு வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன தர்ஷன்’என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.