
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார்.
போன வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலிக்கு பிறகு இவரது மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்து விட்டது.
மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த, தோழா மற்றும் தேவி ஆகிய படங்களும் தமனவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசுவாமி தனது மகன் நிக்கில் கவுடாவை நடிகராக பெரும் முயற்சி செய்து நிறைய பணம் செலவிட்டு ஜாக்குவார் படத்தின் மூலம் நாயகனாக மாற்றிவிட்டார்.
இந்த படத்தில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட இதுவரை 25 லட்சம் ரூபாய் வாங்கி வந்தனர் தமன்னா, சார்மி, ஸ்ருதிஹாசன், காஜல் ஆகியோர்.
ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு பாடலுக்கு ஆட 1 கோடி ரூபாய் கேட்டுள்ளாராம் தமன்னா.
இதனால் தங்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்க வில்லையே என என்று ஆதங்கத்தில் உள்ளார்களாம் மற்ற நடிகைகள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.