ரஜினி - கமலுடன் ஜோடி சேர ஆசைப்படும் தமன்னா! திரைவாழ்க்கை அஸ்தமாகும் நேரத்துல இப்படியொரு ஆசையாம்மா? - ரசிகர்கள் கிண்டல் ...

Published : Nov 25, 2019, 11:09 AM IST
ரஜினி - கமலுடன் ஜோடி சேர ஆசைப்படும் தமன்னா! திரைவாழ்க்கை அஸ்தமாகும் நேரத்துல இப்படியொரு ஆசையாம்மா? - ரசிகர்கள் கிண்டல் ...

சுருக்கம்

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மில்க் ப்யூட்டி தமன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்ஷன் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதனிடையே, உலக நாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உங்கள் நான் நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்றார். 

அப்போது, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை குவித்தது.இந்த நிலையில், திருச்சியில் நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை தமன்னா சந்தித்தார். 

அப்போது, ரஜினி - கமல் குறித்து அவர் கூறுகையில், ரஜினி, கமல் ரசிகையாக அவர்களை நேசிக்கிறேன். அதனால்தான் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டேன். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால், ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்வதை வரவேற்கிறேன். அவர்களுடன் இணைந்து நடிக்கவும் ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே உலக நாயகன் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், 2021ம் ஆண்டு அரசியல் களத்தில் குதிக்க சூப்பர் ஸ்டாரும் தயாராகி வருகிறார். தங்களது திரைப் பயணத்தில் இருவரும் கடைசிக் கட்டத்தில் இருக்கின்றனர். 

இந்த வேளையில், ரஜினி, கமலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் தமன்னாவின் ஆசை நிறைவேறுமா என்பது சந்தேகமே. தமன்னாவின் இந்த ஆசையை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும், ரஜினி, கமல் ஆகியோரின் திரைவாழ்க்கை அஸ்தமனமாகும் நேரத்துல, உனக்கு இப்படியொரு ஆசையாம்மா என கிண்டல் செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!