’தளபதி 63’ கதைக்கு உரிமை கோரி கோர்ட் படியேறிய உதவி இயக்குநர்...டென்சனில் அட்லி, விஜய்...

By Muthurama LingamFirst Published Apr 15, 2019, 5:08 PM IST
Highlights

தொடர்ந்து கதைத் திருட்டுச் சிக்கலில் நடிகர் விஜய் படங்கள் மாட்டிவரும் நிலையில் தற்போது நடந்து வரும் ‘தளபதி 63’ கூட என்னுடைய கதையைத் திருடி எடுக்கப்படும் படம் தான் என்று உதவி இயக்குனர் ஒருவர் நீதி மன்றத்தை நாடியுள்ள நிலையில் விஜய், அட்லி தரப்பு சென டென்சனில் உள்ளது.
 

தொடர்ந்து கதைத் திருட்டுச் சிக்கலில் நடிகர் விஜய் படங்கள் மாட்டிவரும் நிலையில் தற்போது நடந்து வரும் ‘தளபதி 63’ கூட என்னுடைய கதையைத் திருடி எடுக்கப்படும் படம் தான் என்று உதவி இயக்குனர் ஒருவர் நீதி மன்றத்தை நாடியுள்ள நிலையில் விஜய், அட்லி தரப்பு சென டென்சனில் உள்ளது.

’தெறி’, ’மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ’தளபதி 63’ என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்காக பிரமாண்ட ஸ்டேடியம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதேவேளையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தை நாடியுள்ளார் குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா.

இதுகுறித்து கூறிய செல்வா, ”நான் பெண்கள் கால்பந்து போட்டியை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இந்தக் கதையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கூறியிருந்தேன்.ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்க இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது தொடர்பாக நான் முதன்முறையாக நீதிமன்றத்தை அணுகிய போது எழுத்தாளர்கள் சங்கத்தை அணுகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதற்கு பிறகு அட்லீயின் மேனேஜர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்னிடம் பேசினார்கள். அப்போது இதை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் இந்த பேச்சு என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன். அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ் குமார் தலைமையிலான கமிட்டி என்னை விசாரித்தது. இறுதியாக நான் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து 6 மாத காலம் கூட ஆகவில்லை.சங்க விதிகளின்படி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்கு பிறகே கதைத்திருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான கடிதத்தையும் என்னிடம் வழங்கினார்கள்.

மீண்டும் நான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். இதுதொடர்பான வழக்கு 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மேலும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்கிறார் செல்வா. சும்மா ஒரு செட் போட மட்டுமே  5 கோடி வரைக்கும் செலவழிக்கத்தயாராக இருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர் மனசார என்றுதான் ஒரிஜினல் எழுத்தாளர்களின் கதைகளை கவுரவப்படுத்த முன்வருவார்களோ?

click me!