ரசிகனை விறகாக்கி குளிர்காயும் மாஸ் ஹீரோக்கள் லிஸ்ட்டில் அஜித்தும் சேர்ந்துவிட்டாரா? தல-யை சுற்றும் தாறுமாறு விமர்சனம்.

Published : Jan 16, 2019, 06:59 PM ISTUpdated : Jan 16, 2019, 07:01 PM IST
ரசிகனை விறகாக்கி குளிர்காயும் மாஸ் ஹீரோக்கள் லிஸ்ட்டில் அஜித்தும் சேர்ந்துவிட்டாரா? தல-யை சுற்றும் தாறுமாறு விமர்சனம்.

சுருக்கம்

எத்தனை நாளைக்குதான் அஜித்து நல்லவன் மாதிரி நடிப்பார்? இதோ வேஷம் வெளுத்துடுச்சு!’ என்கிறார்கள். 

அஜித்தை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது?...எனும் கேள்விக்கு கொத்தான பரவச பதில்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதில் மிக முக்கியமான பதிலாக எல்லோரும் கோடிட்டுக் காட்டுவது...’தன் படம் பிய்த்துக் கொண்டு ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை மன்றங்கள் அமைக்க செய்து வளர்வதும், பத்து படம் ஹிட்டானதும் அப்படியே ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக்கி! ரசிகனை தொண்டனாக்கி! முதல்வர் நாற்காலிக்கு கனவு காண்பதும்தான் இங்கிருக்கும் மாஸ் ஹீரோக்களின் பிழைப்பு. 

ஆனால் அதை அடித்து நொறுக்கி, தனக்காக இருந்த ரசிகர் மன்றங்களையே கலைத்தவர் அஜித். பிடிச்சிருந்தா என் படத்தை பாரு, இல்லேன்னா பார்க்காதே!’ என்று புது ஹீரோயிஸம் பேசிய யதார்த்தவாதி இதனாலேயே அவரை எல்லோருக்கும் பிடிக்கிறது! என்பார்கள். 

ஆனால் விஸ்வாசம் படம் ரிலீஸான பின் நிலவரமோ தலைகீழாக இருக்கிறது. அதாவது! தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக அஜித்தும் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு பிற ஹீரோக்களைப் போல் ரசிகர் மோதலை கண்டுக்காமல் இருக்கிறார் அஜித் என்கிறார்கள். 

ரஜினியின் பேட்ட படத்தோடு தன் படம் ஒன்றாக ரிலீஸாகி மோதுவது உறுதியான நிலையில் இணையதளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் மிக ஆபாசமாக சண்டையிட்டபோது வாயே திறக்கவில்லை அஜித். அதேபோல், பேட்ட மற்றும் விஸ்வாசம் இரண்டும் ரிலீஸான நிலையில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையில் கடும் மோதல் உருவாகி, கத்திக்குத்து, பேனர்கள் எரிப்பு, கொலை முயற்சி, கட் அவுட் சரிவு, விபத்து பலி என்று என்னவெல்லாமோ நடந்து முடிந்துவிட்டது. 

ஆனால் எதற்கும் வாயே திறக்கவில்லை அஜித். வழக்கமாக தன் ரசிகப்பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால், அடி வயிற்றில் இருந்து தொண்டை கிழிய  குரல் கொடுப்பவர், இப்போது இப்படி அமைதியான கொடுமையை பார்த்து ஷாக்காகி கிடக்கிறது கோடம்பாக்க வட்டாரம். 
இப்போது அஜித் பேசிய பழைய பஞ்ச் டயலாக் ஒன்றுதான் நினைவுக்கு வருது...’நானும் எத்தனை நாளைக்குதான் நல்லவனா இருக்குறது?!’ என்பதுதான். ஆனால் தளபதி மற்றும் சுப்பர் ஸ்டாரின் ரசிகர்களோ...’எத்தனை நாளைக்குதான் அஜித்து நல்லவன் மாதிரி நடிப்பார்? இதோ வேஷம் வெளுத்துடுச்சு!’ என்கிறார்கள். 
நெசமாவா தல?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!