தல அஜித்தின் இயக்குநரை மிரட்டும் ரசிகர்கள்: ஏன் இந்த தடாலடி?

Published : Oct 28, 2019, 11:18 AM IST
தல அஜித்தின் இயக்குநரை மிரட்டும் ரசிகர்கள்:	 ஏன் இந்த தடாலடி?

சுருக்கம்

தல அஜித்தின் இயக்குநரை மிரட்டும் ரசிகர்கள்:     ஏன் இந்த தடாலடி?

சுமார் ஆயிரம்  கோடி ரூபாய் பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக தயாராகிறது இந்தி ‘மகாபாரதம்’. இதில் திரவுபதியாக தீபிகாபடுகோனே நடிக்கிறார். அடுத்த தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தில், தென்னிந்திய பிரபலங்கள் சிலரும் நடிக்க வாய்ப்புள்ளது!

*    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் த்ரில்லராக இருக்கும் இந்தப் டீசரின் இறுதியில் இயக்குநரான மிஷ்கினின் பெயர் முதலில் வராமல், இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயர் போடப்பட்டுள்ளது. 
மிஷ்கின், ராஜாவின் பெரும் ரசிகர் என்பதை கவனிக்க.

*    நெல்லை மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு கிராமத்திலிருந்து சினிமா உலகிற்கு வந்தவர் சமுத்திரகனி. இயக்குநராகவும், நடிகராகவும் ஜொலிக்கிறார்  மனிதர். தமிழில் தடம் பதித்து வரும் இவர் ராஜமவுலியின் பிரம்மாண்ட ‘ஆர்.ஆர்’ படத்தில் நடிப்பதோடு, அல்லு அர்ஜூனின் புதிய படம் ஒன்றில் வில்லனாக களமிறங்குகிறார். 
இதில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பேச்சு வழக்கை பேசி நடிக்கிறாராம் கனி.

*    பிகில் ஓரளவு நன்றாகத்தான் இருப்பது போல் பட்டாலும் கூட ரிவியூ என்னவோ மிக மிக மோசமானதான வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சோஷியல் மீடியாவில் பிகிலை படம் ரிலீஸான அரை மணி நேரத்தில் துவங்கி, மூன்று நாட்களாக வெச்சு செய்துவிட்டனர். சோஷியல் மீடியாவாலேயே படத்தின் பெயர் பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. 
முதன் முறையாக சோஷியல் மீடியாவின் பெரும் தாக்கத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளாராம் நடிகர் விஜய். 

*    விஸ்வாசம் எனும் மெகா ஹிட்டுக்குப் பின் நேர்கொண்ட பார்வை எனும் ஆவரேஜ் படத்தை கொடுத்ததால் இயக்குநர் ஹெச்.வினோத் மீது அஜித்தின் ரசிகர்கள் கடும் கடுப்பில் உள்ளனர். இந்த நிலையில் தல யின் அடுத்த படத்தையும் விநோத்தே பண்ணுகிறார். 


போலீஸ் ஸ்டோரியான இதில் அஜித் டை அடித்து, மீசை வைத்து என்று ’என்னை அறிந்தால்’ சத்யதேவ் போல் செம்ம ஃபிட்டாக இருக்கிறார். 
இருந்தாலும் ‘தல லுக்கெல்லாம் பக்கா. ஆனா படம் பக்காவா இல்லேன்னா நாங்க மனுஷனா இருக்கமாட்டோம்’ என்று இயக்குநரின் காதுகளுக்கு கேட்கும் வகையில் அஜித்தின் ரசிகர்கள் மிரட்டிவருகின்றனராம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு