
இந்திய சினிமா வரலாற்றில் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிக்கும் அதிசயம் ‘என்.டி.ஆர். கதாநாயகடு’ படத்தில் நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அப்படத்தில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கிறார்.
கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாவித்ரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, செளகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் ஆம்னி, மாளவிகா நாயர், ஹன்ஷிகா மோத்வானி, பாயல் ராஜ்புத், மஞ்சிமா மோகன் என்று ஹீரோயின்கள் பட்டியல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் முடியும் தறுவாயில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.
என்.டி.ஆரின் முதல் மனைவி பசவதரகமாக வித்யா பாலன் நடிக்க, அவரது இரண்டாவது மனைவி லட்சுமி பர்வதமாக ஆம்னி நடிக்கிறார். இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில்10க்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகள் நடிப்பதாலும், என்.டி.ஆரின் மவுசு ஆந்திராவில் இன்றளவும் இருப்பதால் படம் மிகப்பெரிய அளவுக்கு பிசினஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.