59 வயசில என்னா ஆட்டம்... அஜித்தின் "ஆலுமா, டோலுமா" பாடலுக்கு ஆட்டம் போட்ட பாலகிருஷ்ணா... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ...!

Published : Nov 28, 2019, 05:45 PM IST
59 வயசில என்னா ஆட்டம்... அஜித்தின் "ஆலுமா, டோலுமா" பாடலுக்கு ஆட்டம் போட்ட பாலகிருஷ்ணா... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ...!

சுருக்கம்

"ரூலர்" படத்தின் ஷீட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதற்கு மாஸ் புரோமோஷன் ஒன்றை கொடுத்துள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா. 

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போன பாலகிருஷ்ணா, தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் "ரூலர்" என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பூமிகா சாவ்லா, சாயாஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சிரன்டன் பட் இசையமைக்க, சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ஏற்கெனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ரூலர்' படம், வரும் டிசம்பர் 20-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் லைக்குகளை குவித்து வருகிறது.  பாலகிருஷ்ணா பட பாணியில் அனல் பறக்கும் சண்டை காட்சிகள், மாஸ் பஞ்ச் டைலாக்குகள், கொலைவெறி வில்லன்கள், ஹாட் லவ் சாங்க்ஸ் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனால் தானோ என்னவோ ஒரே நாளில் "ரூலர்" பட டீசரை 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். 

"ரூலர்" படத்தின் ஷீட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதற்கு மாஸ் புரோமோஷன் ஒன்றை கொடுத்துள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாலகிருஷ்ணா, அஜித்தின் "ஆலுமா, டோலுமா" பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. வேதாளம் படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் அப்போது யூ-டியூப்பை அதிரவைத்தது. இப்போது பாலகிருஷ்ணாவின் அதிரடி ஆட்டத்தால் "ஆலுமா, டோலுமா" பாடல் டோலிவுட்டில் மேலும் பிரபலமடைந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்