நான் லெஸ்பியன் இல்லை! எந்த நடிகையையும் ரேப் செய்யவில்லை! தனுஸ்ரீ தத்தா காட்டம்!

By vinoth kumarFirst Published Oct 31, 2018, 10:36 AM IST
Highlights

தனுஸ்ரீ லெசிபியன் என்றும் அவர் தன்னையே பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் திடுக்கிடும் புகார் அளித்தார் ராக்கி சாவந்த். மேலும் தனுஸ்ரீ ஒரு போதைக்கு அடிமையானவள் என்றும் கூறி இருந்தார். 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானா படேகர். அதே போல், பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் ஹார்ன் ஓகே பிளீஸ் என்ற படத்தில் நடித்த போது நானா படேகர் தவறாக தொட முயன்றதாகவும், அதற்கு ஒப்புக் கொள்ளாததால் கட்சியினரை வைத்து மிரட்டியதாகவும் புகார் கூறி இருந்தார்.

 

இதுதொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி வழக்கு தொடர்ந்துள்ளன. நோட்டீசும் அனுப்பியுள்ளனர். இதில் நானாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தனுஸ்ரீ தத்தாவை கடுமையாக விமர்சிக்கும் கருத்துகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் நடிகை ராக்கி சாவந்துக்கும், தனுஸ்ரீ தத்தாவுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது. தனுஸ்ரீ லெசிபியன் என்றும் அவர் தன்னையே பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் திடுக்கிடும் புகார் அளித்தார் ராக்கி சாவந்த். மேலும் தனுஸ்ரீ ஒரு போதைக்கு அடிமையானவள் என்றும் கூறி இருந்தார்.

 

தலையில் முடியை சற்று நீக்கி இருந்ததை வைத்து, தனுஸ்ரீ ஒரு லெஸ்பியன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாக ராக்கி சாவந்த் தெரிவித்து இருந்தார். இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா, ராக்கி சாவந்துடன் தனக்கு எந்த ஒரு நட்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ராக்கி சாவந்த அருவருப்பானவள் என்றும், வக்கிர புத்தி கொண்டவள் என்றும் பேசியுள்ளார் தனுஸ்ரீ. 

நண்பர்களை மிகவும் கவனத்துடனேயே தேர்வு செய்ய வேண்டும் என்று தனது பெற்றோர் சொல்லி வளர்த்ததாகவும் அந்த அறிவுரையைத் தான் வாழ்நாள் முழுவதும்  கடைபிடித்து வருவதாகவும் கூறியுள்ளார் தனுஸ்ரீ. தனக்கு நல்லவர்கள் இல்லை என்று தோன்றினால் அவர்களை ஒதுக்கி விடுவதே தனது குணம் என்று கூறியுள்ளார் தனுஸ்ரீ. மேலும் ராக்கியின் கருத்துகள் அருவருப்பானவை, வக்கிரம் உடையவை, படிப்பறிவற்றவள் பேசுவதைப் போல் உள்ளதாகவும் குமுறியுள்ளார் தனுஸ்ரீ. 

தனது தலைமுடியை நீக்கி இருப்பதை ஒருபாலின விரும்பிக்கான அடையாளம் என்று ராக்கி சாவந்த் கூறி இருப்பதற்கு பதில் கொடுத்துள்ள தனுஸ்ரீ இந்து அல்லது புத்த மதத்தில் கடவுளுக்கு தன்னை அர்ப்பணிப்பவர்கள் தலைமுடியை நீக்கிக் கொள்வது வழக்கம் தான் என்று தெரிவித்துள்ளார். இதையா ஒருபாலின சேர்க்கை என்று கூறுவது என்றும், அவமானமாக இல்லையா என்று கேட்டுள்ளார் தனுஸ்ரீ.

click me!